சுவையான இறால் மசாலா!

0
547

சுவையான இறால் மசாலா!

தேவையான பொருட்கள்:

இறால் -அரைகிலோ
மஞ்சள் தூள் -கால் ஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ்- 2 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு

வறுத்து அரைக்க:

மிளகாய்-4
பட்டை, ஏலக்காய், கிராம்பு- 1:2:3
தேங்காய் கால் மூடி

தனியாக அரைக்க

தேங்காய் துருவல்- 3 ஸ்பூன்
முந்திரி -10

தாளிக்க:

வெங்காயம்- 1
கறிவேப்பிலை- 1 கொத்து
பச்சைமிளகாய் -3
இஞ்சிபூண்டு விழுது- 4 ஸ்பூன்
மிளகாய் தூள் -1 ஸ்பூன்
தக்காளி -3

செய்முறை:

இறாலைத் சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து 10 நிமிடங்களுக்கு ஊறவிடவும். வறுக்க கொடுத்த பொருட்களை தேங்காய் தவிர்த்து மற்றவற்றை வறுத்து, பின் தேங்காய் சேர்த்து நீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்.

இறாலில் அரைத்த விழுதையும் சேர்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, பச்சைமிளகாய், வெங்காயம் வதக்கவும். இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

அத்துடன் மிளகாய் தூள், உப்பு, தக்காளி சேர்த்து வதக்கவும். இப்போது ஊறிய இறாலை சேர்த்து கிளறிவிட்டு மூடிவிடவும். பாதி வெந்ததும் தேங்காய்,முந்திரி விழுதை சேர்த்து மீண்டும் மூடிவிட்டு இறக்கிவிடவும். சுவையான இறால் மசாலா தயார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: