சீரகத்தின் மருத்துவ பயன்களும் சீரகத்தின் பக்கவிளைவுகள்!

0
172

சீரகத்தின் மருத்துவ பயன்களும் சீரகத்தின் பக்கவிளைவுகள்!

உலகின் மிகப் பழமையான மணமூட்டிகளில், அதிக செல்வாக்கு நிறைந்தவைகளுள் சீரகம் ரொம்ப முக்கியமானது.

பார்க்கும் போது அவ்வளவு வசீகரம் இல்லாமல் கொஞ்சம் அழுக்காய், அப்படியே சாப்பிட்டால் லேசான கசப்பாய், உலர்வாய் இருக்கும் இந்த சீரகம்.

சீரகத்தின் மருத்துவ பயன்கள்!

சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும். எடையும் குறையும். சீரகத்தையும், உப்பையும் சேர்த்து தண்ணீர் குடித்தால் வயிற்றுவலிக்கு உடனடியாக தீர்வு தரும். சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும். சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் நிற்கும். சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நின்றுவிடும். சீரகத்தை மென்று தின்றாலே வயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும். சீரகப்பொடியோடு எலுமிச்சை சாறு சேர்த்து குழைத்து சாப்பிட்டால் பித்தம் அகலும்.

நல்லெண்ணெயில் சீரகத்தை போட்டு காய்ச்சி எண்ணெய் தேய்த்து குளித்தாலும் பித்தம் நீங்கும். சீரகப்பொடியோடு தேன், உப்பு, நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறிந்துவிடும். சீரகத்தை வறுத்து சுடுநீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும். மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் மந்தம் நீங்கும். சீரகம் வில்வவேர்ப்பட்டை இரண்டையும் அரைத்து பாலில் கலந்து காலையில் குடித்து வர தாது பலம் கூடும். சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை சேர்த்து தூளாக்கி வைத்துக்கொள்ளவும்.

இதில் இரண்டு சிட்டிகை வீதம் தினம் இரண்டு வேளையாக சாப்பிட்டால் உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும். சீரகத்தை லேசாக வறுத்து அத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர நரம்புகள் வலுப்பெறும். நரம்புத்தளர்ச்சி குணமாகும். சிறிது சீரகத்துடன் இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று ஒரு தம்ளர் குளிர்ந்த நீர் பருகினால் வயிற்று பொருமல் வற்றி நலம் பயக்கும். சீரகத்துடன் மூன்று பற்கள் பூண்டு வைத்து நன்றாக அரைத்து எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால் குடல் கோளாறுகள் குணமாகும்.

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் நோய்க்கு சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து நன்றாக அரைத்து எலுமிச்சை சாறில் சேர்த்து பருகி வர கல்லீரல் கோளாறு குணமாகும். சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும். கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடி செய்து குடித்தால் சீதபேதி குணமாகும். த்து தேனில் குழைத்து சாப்பிட்டால் தொடர் விக்கல் விலகும்.

சிறிது தனியாவுடன் சிறிது சீரகம் சேர்த்து மென்று தின்றால் அதிகம் மது உண்ட போதை தணியும் திராட்சை பழச்சாறுடன் சிறிது சீரகத்தை பொடித்திட்டு பருகினால் ஆரம்பநிலை ரத்த அழுத்த நோய் குணமாகும். மத்திய தர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது.

எப்போது சாப்பிடாலும் சாப்பிட்ட கொஞ்ச நேரத்திற்க்கெல்லாம் வயிறு வீங்கிக் கொள்கிறது. அப்படி ஒன்றும் அதிகமாக சாப்பிடவில்லை அளவாய்த்தான் சாப்பிட்டேன் ஆனாலும் வயிறு இப்படி ஆகிவிட்டது, என வருத்தப்படுபவருக்கு சீரகம் ஒரு அருமையான மருந்து. சீரகம், ஏலம் இதனை நன்கு இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து உணவிற்குப்பின் 1/4 ஸ்பூன் அளவு சாப்பிட தீரும்.

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும். சீரகப் பொடியை வெண்ணெயில் குழைத்து சாப்பிட எரிச்சலுடன் கூடிய அல்சர் நோய் தீரும்.

சீரகத்தைக் கரும்புச்சாறிலும், எலுமிச்சைச்சாறிலும் இஞ்சிசாரிலும் ஒவ்வொன்றும் மூன்று நாளென, சுட்டெரிக்கும்படி வர இருக்கும் வெயில் காலத்தில் வைத்து எடுத்து அந்த சாறு ஊறிய பொடியை நன்கு மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த சீரகச் சூரணம், பித்த தலைவலி எனும் மைக்ரேனுக்கு அருமையான மருந்து.

சீரகத்தை கொதிக்கும் நீரில் போட்டு கஷாயம் செய்து கர்ப்பிணிகளுக்கு கொடுத்து வருவது நல்லது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சீரகத்தின் பக்கவிளைவுகள்!

சீரகம் பல நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது. குறிப்பாக ஜீரண மண்டலத்தின் பிரச்சனைகளை போக்கும். அதற்காக பலரும் அதை அதிகமாக எடுத்துக் கொள்வார்கள்.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. அது போலத்தான் சீரகமும். அளவாக எடுத்துக் கொண்டால் மருந்து அதுவே அதிகமானால் என்ன ஆகும் என்பதைப் பார்ப்போம்.

பொதுவாக எந்த ஒரு கார உணவும் சீரகத்தை பயன்படுத்தாமல் தயாரிப்பதில்லை. அதற்கு காரணம் அனைவருக்கும் தெரியுமோ, தெரியாதோ. உண்மை காரணம் அது ஜீரண சக்தையை அதிகப்படுத்தும். நச்சுக்களை வெளியேற்றும். வாய்வை குறைக்கும்.

அதற்காக உடல் நோய்களுக்காக உபயோகிக்க நினைத்தால், மருத்துவரை ஆலோசித்த பின்னரே உபயோகிப்பது நல்லது.

சாதரணமாக சீரக நீரை குடித்தால் தவறில்லை, அதுவே உடல் நோய்களுக்காக பயன்படுத்த நினைத்தால் மருத்துவருடன் கண்டிப்பாக ஆலோசனை செய்ய வேண்டும். மேலும் ஒரு சிலர் சீரகத்தை அடிக்கடி வாயில் போட்டு அசைத்துக் கொண்டிருப்பார்கள் இது முற்றிலும் தவறு. அதிலுள்ள காரத்தன்மை மிகப்பெரிய தீங்கை விளைவிக்கும்.

சீரகம் வாய்ப் பிடிப்பிற்காக உபயோகிப்பதுண்டு. ஆனால் அதிக சீரகத்தை சாப்பிட்டால் நெஞ்ச்ரிச்சல் உண்டாகும் கவனித்திருக்கிறீர்களா? அதிக அசிடிட்டி இருப்பவரகள் சீரகத்தை மிதமாக அல்லது குறைவாக எடுத்துக் கொள்வது நல்லது.

அதிகமாக சீரகத்தை உட்கொள்ளும் போது அடிக்கடி ஏப்பம் உண்டாகும். நீண்ட காலமாக சீரகத்தை எடுத்துக் கொள்பவர்களுக்கு கல்லீரல் பாதிப்பும் ஏற்படும். சீரகத்தில் உள்ள எண்ணெய் எளிதில் அதிக அளவு ஆவியாவதால் கல்லீரல் மற்றும் சிறு நீரகம் பாதிக்கபடலாம்.

சீரகத்தை அதிகம் எடுத்துக்கொண்டால் கர்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டு, குறைபிரசவம் உண்டாவதற்கு கூட வாய்ப்பு உண்டு.
தினமும் சீரகம் சாப்பிடுவதன் மூலம் வயிற்றில் உப்புசம் உண்டாகி, குமட்டல் மற்றும் வாந்தி போன்றவைகள் உண்டாகும்.

மாதவிடாய் காலங்களில் அதிக அளவு சீரகத்தை உட்கொள்வதால், மாதவிடாய் காலங்களில் ரத்தப்போக்கு அதிகம் ஏற்படும்.
சீரகம் சர்க்கரை அளவை ரத்தத்தில் குறைக்கச் செய்யும். சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் சீரகத்தை அதிகம் சாப்பிடும்வதை தவிருங்கள்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: