சிறுமியுடன் தகாத உறவுக்கு முயன்ற ஆசாமி வசமாக மாட்டினார்.

0
103

சிறுமியுடன் தகாத உறவுக்கு முயன்ற ஆசாமி வசமாக மாட்டினார்.

இளவயதுச் சிறுமியுடன் இணைய ‘சேட்டிங்’கில் ஈடுபட்ட போது தகாத உறவு வைத்துக் கொள்ள ஆசைப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர். பிரிட்டனில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்த இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த பாலச்சந்திரன் என்பவரே கைது செய்யப்பட்ட நபராவார்.

இவர் சமூக வலைத்தளமான பேஸ்புக் மூலம் 14 வயதான சிறுமியுடன் சேட்டிங் செய்துள்ளார். இந்நிலையில் அவர் சிறுமியை லண்டனில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வருமாறு அழைத்துள்ளார்.

பர்மிங்ஹாமில் இருந்து லண்டனுக்கு சென்று, சிறுமிக்காக ஹோட்டல் அறையில் காத்துக் கொண்டிருந்த போது போலீசார் அங்கு வந்தனர். அவரை கைது செய்தபோது தனது குற்றத்தை மறுத்தார். பின்னர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது அவர் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமியை பாலியல் துஷ்ப்பிரயோகத்திற்கு உள்ளாக்க முயன்ற குற்றத்திற்காக 15 மாதச் சிறை தண்டனையை விதித்தார். அவர் பணிபுரிந்த வங்கி நிர்வாகமும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையை எடுத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: