சிக்கிய அதிர்ச்சி கடிதம்! விமான நிலைய கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த பெண்!

0
123

அமெரிக்காவின் Tuscon சர்வதேச விமான நிலைய கழிவறையில் பிள்ளை பெற்றெடுத்த பெண்ணின் புகைப்படம் மற்றும் வீடியோவை விமான நிலைய அதிகாரிகள் வெளியிட்டு உதவி கோரியுள்ளனர்.

அரிசோனா மாகாணத்தில் அமைந்துள்ள Tuscon சர்வதேச விமான நிலைய கழிவறையிலேயே கடந்த மாதம் இச்சம்பவம் நடந்துள்ளது.

தற்போது குறித்த பெண்ணின் புகைப்படம் மற்றும் காணொளியை வெளியிட்டுள்ள விமான நிலைய அதிகாரிகள் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

விமான நிலையத்தின் வாடகை கார் பதிவு செய்யும் அலுவலகத்தின் அருகாமையில் உள்ள கழிவறையில் இருந்து கடந்த மாதம் 14 ஆம் திகதி, விமான நிலைய ஊழியர் ஒருவர் குறித்த பிஞ்சு குழந்தையை கண்டெடுத்துள்ளார்.

இதனையடுத்து அவர் விமான நிலைய அதிகாரிகளை தகவல் தெரிவிக்க, அவர்கள் விசாரணையை மேற்கொண்டனர்.

குறித்த குழந்தையானது பிறந்த பின்னர் அதன் தாயாரால் சுத்தம் செய்யப்பட்டு, போர்வை ஒன்றால் போர்த்தப்பட்டு, உடைமாற்றும் அறையில் கிடத்தப்பட்டிருந்தது. மட்டுமின்றி, குறித்த குழந்தை பேசுவது போன்று ஒரு கடிதமும் அதில் வைக்கப்பட்டிருந்தது.

அதில், தயவு செய்து உதவுங்கள், விமான நிலைய நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்துங்கள், அவர்கள் உரிய இல்லத்திற்கு கொண்டு சேர்ப்பார்கள். எந்தன் தாயாருக்கு தாம் கர்ப்பமாக இருப்பது தெரியவில்லை. அவர் தற்போதைய சூழலில் தன்னை வளர்ப்பதற்கு இயலாத நிலையில் உள்ளார்.

விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினால், அவர்கள் ஒரு நல்ல இல்லத்தில் என்னை ஒப்படைப்பார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது. கழிவறையில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை தற்போது மிகவும் ஆரோக்கியமான நிலையில் உள்ளது.

அரிசோனா மாகானத்தை பொறுத்தமட்டில், பிறந்த பிஞ்சு குழந்தைகளை காப்பாற்ற முடியாது என கருதும் பெற்றோர்கள், அரசு குறிப்பிட்டுள்ள பகுதிகளில் குழந்தைகளை ஒப்படைக்கலாம்.

ஆனால் குறித்த பட்டியலில் விமான நிலையம் இல்லை. இருப்பினும் விமான நிலையத்தில் அவர் ஏன் குழந்தையை கைவிட்டு செல்ல வேண்டும் என்ற கேள்வி அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: