Newjaffna சற்று முன்னர் படகு கவிழ்ந்து விபத்து மாணவர்கள் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

0
366

யாழ்.மண்டைதீவு பகுதியில் சற்று முன்னர் படகு கவிழ்ந்து விபத்து!

யாழ். மண்டைதீவு, சிறுதீவு கடற் பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது.

முன்னதாக, ஐவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவரை தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.இந்த நிலையில் காணாமல் போயிருந்த மாணவனும் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் பண்ணை மண்டதீவு கடற் பகுதியில் இன்று பிற்பகல் நடந்த படகு விபத்தில்6 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த ஐந்து மாணவர்களில் மூவர் உரும்பிராய்ப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகின்றது.

ஒருவரைத் தேடும் பணி நடைபெறுகின்றது. உயிரிழந்தவர்கள் இம்முறை உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நண்பன் ஒருவரது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்போது 18 முதல் 20 வயதுக்கிடைப்பட்ட றஜீவ், பிரவீன், தனுரதன், தனுசன் மற்றும் செல்வின் ஆகியோர் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில் அவர்களது சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன.

இவர்களில் மூவரே யாழ்ப்பாணம் உரும்பிராய் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களின் திடீர் மரணத்தினால் உரும்பிராய் பிரதேசம் சோகமயமாக காட்சியளிக்கின்றது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: