சக்கைப் போடு போடும் சராஹா செயலி; உண்மையில் இதில் என்னதான் இருக்கிறது?

0
109

சக்கைப் போடு போடும் சராஹா செயலி; உண்மையில் இதில் என்னதான் இருக்கிறது?

சவூதி இளைஞரால் உருவாக்கப்பட்ட ‘சராஹா’ செயலி (Sarahah app) 30 கோடி பேரால் பதிவிறக்கம்

சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பகிரப்பட்டுவரும் செயலியாக ‘சராஹா’ செயலி (Sarahah app) இடம்பிடித்துள்ளது. குறுகிய காலத்துக்குள் 30 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இத்தகைய சாதனை படைத்துவரும் சராஹா மூன்று பேரால் மாத்திரமே இயக்கப்படுகிறது என்பது வியப்பாகும்.

சராஹா, ஒரு விசயத்தை நேரடியாக சொல்ல முடியாதபோது, அதற்கான மாற்றுவழி வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இச் செயலியை சிலர் மொட்டை கடதாசியின் டிஜிட்டல் வடிவம் எனவும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.
ஏனென்றால் ஒருவர் சொல்லும் கருத்து ஏனைய தரப்பினருக்கு பிடிக்காமல் போவதற்கு வாய்ப்புள்ளது. அதனால் இதை பயன்படுத்தி தமது கருத்துக்களை நேர்மையாக யாருக்கும் அச்சப்படாமலும் தெரிவிக்கலாம்.

‘சராஹா’ என்பது ஓர் அரபு சொல்லாகும், இந்த சொல்லுக்கான பொருள் ‘நேர்மை’ என்பதாகும். இந்த செயலியை பயன்படுத்தி எவருக்கு வேண்டுமானாலும் செய்தி அனுப்பலாம். ஆனால் செய்தி அனுப்பியவர் யார் ? என்ற விபரம் பெறுநருக்கு தெரியாது.

அத்துடன் இந்த செய்திக்கு பதிலும் அனுப்ப முடியாது. இந்த காரணங்களினாலேயே ‘சராஹா’வை அனைவரும் விரும்புகின்றனர் எனலாம்.

இந்த செயலி சவூதி அரேபியாவை சேர்ந்த ஸைன் அல்-அப்தீன் தௌஃபீக் எனும் 29 வயதான இளைஞரால் உருவாக்கப்பட்டுள்ளது. இச் செயலி தொடர்பாக அவர் கூறுகையில் சராஹாவை கிட்டத்தட்ட ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்வார்கள் என்றே எதிர் பார்த்தேன். ஆனால், கூகுள் ப்ளே ஸ்டோரில் மாத்திரம் 50 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் சராஹாவை பதிவிறக்கம் செய்துள்ளனர், இது தனக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

‘சராஹா’ செயலியானது மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க நாடுகளில் கடந்த பெப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் அண்மைக்காலத்தில் இச்செயலியின் பாவனை வெகுவாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: