விபரீதமாக நடந்த சகோதரர்களின் திருமணம். சந்தோசப்படுவீர்களா? துக்கப்படுவீர்களா?

0
291

விபரீதமாக நடந்த சகோதரர்களின் திருமணம். சந்தோசப்படுவீர்களா? துக்கப்படுவீர்களா?

உலகம் எங்கிலும் அண்ணன் – தங்கை திருமணம் செய்துக் கொள்ளும் வழக்கம் பெரிதாக இல்லை. இதை யாரும் ஆமோதிப்பதும் இல்லை.

ஆனால் விபத்தாக இதுபோன்ற சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்காவின் மிசிசிப்பி பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியினர், தாங்கள் இரட்டையர் என்ற விசயமே தெரியாமல் திருமணம் செய்து, மகப்பேற்று மருத்துவரின் மரபணு பரிசோதனையில் மூலம் அச்செய்தியைக் கண்டறிந்து அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்..

1984-ல் நடந்த கார் விபத்தில் கணவன் – மனைவி உயிரிழந்துள்ளனர்.

அவர்களது இரட்டை குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அவர்களில் ஆண் குழந்தையை ஒருவரும் பெண் குழந்தையை ஒருவரும் எடுத்து வளர்த்தனர்.

இந்த இருவருக்கும் தாங்கள் யார் என்ற விவரம் தெரியாமல் ஒரே கல்லூரியில் பயின்றனர்.

பயின்ற போதே காதலும் கொண்டனர். பிறகு திருமணமும் செய்துக் கொண்டனர்.

திருமணமாகியும் அப்பெண் கர்ப்பம் தரிக்கவில்லை என தெரியவர, இருவரும் மகபேறு மருத்துவரைக் கண்டு பரிசோதனை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

மரபணு பரிசோதனையில் வந்த தகவலை முதலில் மனைவி நம்ப மறுத்தார்.

இந்த தருணத்தில் தான் மருத்துவர் ஜாக்சன், ஊடகங்களிடம் இந்த வினோத நிகழ்வை பற்றி கூறினார்.

இவர்களது நலன் கருதி இருவரின் பெயர் மற்றும் படத்தை பகிர மருத்துவர் மறுத்தார்.

இப்போது தொடர்ந்து சேர்ந்து வாழ்வதா? அல்ல பிரிவதா? என்ற பரிதவிப்பில் செய்வதறியாது திகைத்து போய் இருக்கின்றனர் அந்த தம்பதிகள்.

உலகெங்கிலும் காட்டுத்தீ போல பரவிய இந்த செய்தி போலி என, டெயிலிமெயில் யூ.கே இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த செய்தி பல சர்வதேச ஊடகங்களிலும் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: