கோவில் உச்சியில் இருந்து விழுந்து இங்கிலாந்து சுற்றுப்பயணி பரிதாப பலி!!

0
64

கோவிலின் மேல்பகுதியில் இருந்து கீழே விழுந்த இங்கிலாந்து சுற்றுப்பயணி பரிதாப பலி!!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் உள்ள ஒரு கோவிலில் 4000 அடி பள்ளத்தில் ஒரு பக்தர் விழுந்து பலியான சம்பவம் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் வடநாட்டில் உள்ள கோவில் ஒன்றை சுற்றுப்பார்த்து வீடியோ எடுத்த இங்கிலாந்து நாட்டின் சுற்றுப்பயணி ஒருவர் கீழே விழுந்து பரிதாபமாக பலியானார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற கோவில் லட்சுமிநாராயணன் கோவில். இந்த கோவிலுக்கு மனைவியுடன் வந்த இங்கிலாந்து சுற்றுப்பயணி ரோஜர் ஸ்டோஸ்பரி என்ற 56 வயது நபர் கோவிலின் மேல்பகுதியில் உள்ள கலையம்சங்களை வீடியோ எடுத்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென கால் தவறியதால் ரோஜர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். தன் கண்முன்னே கணவர் கீழே விழுந்து மரணம் அடைந்ததை கண்டு அதிர்ச்சியான அவரது மனைவி மூர்ச்சையாகி கீழே விழுந்தார். இந்த நிலையில் மரணம் அடைந்த ரோஜரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது சொந்த நாட்டிற்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: