கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்து விபத்து! 44 பேர் படுகாயம் சிலர் கவலைக்கிடம்!

0
62

கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்து விபத்து! 44 பேர் படுகாயம் சிலர் கவலைக்கிடம்!

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தொன்று விபத்திற்கு உள்ளாகியதில் 44பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து இரத்தினபுரி, பதுல்பான பிரதேசத்தில் வைத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

மாத்தறை – ஊருபொக்க பிரதேசத்தில் இருந்து, கொழும்பு நோக்கி பயணித்த குறித்த பேருந்து பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

தற்போது படுகாயமடைந்தவர்கள் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிலரின் நிலை கவலைக்கிடம் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: