கொதிக்கும் சாம்பாரை சிறுவன் மீது ஊற்றிய சமையல் காரர்.!சிறுவனுக்கு நடந்த கொடுமை.!!

0
48

சிறுவன் மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய சமையல் காரர்.! பள்ளியில் சிறுவனுக்கு நடந்த கொடுமை.!!
மத்தியபிரதேசம் மாநிலம் டின்டோரி என்ற பகுதியில் தொடக்க பள்ளி இன்று உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு மத்திய உணவு பள்ளியிலேயே வழங்கப்படுகிறது.

இந்நிலையில் பள்ளியில் ஒரு நாள் மத்திய உணவு வழங்கப்பட்டது. அப்போது பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரின்ஸ் மொஹ்ரா 2 வது முறையாக கொஞ்சம் சாப்பாடு கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பள்ளியின் சமையல்காரர் நேம்வதி பாய் என்பவர் சிறுவனின் மீது சூடாக இருந்த சாம்பாரை எடுத்து ஊற்றியுள்ளார்.

இதனால் வலி தாங்க முடியாமல் சிறுவன் அலறி துடித்துள்ளான். மேலும் சிறுவனின் முகம், மார்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டதால் பின்னர் சிறுவன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: