கொடுமையின் உச்சகட்டமாக 8 மாத குழந்தை பாலியல் பலாத்காரம்!

0
64

டெல்லியின் சகர்பூர் பஸ்தி பகுதியில் வீட்டில் இருந்த 8 மாத குழந்தையை வெளியே கூட்டிச் செல்வதாகக் கூறிவிட்டு சூரஜ் (28) என்பவர் குழந்தையை ஒதுக்குப்புறமான இடத்துக்குக் கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின்னர், குழந்தையை வீட்டில் கொண்டு படுக்கவைத்துள்ளார். குழந்தையின் தாய், வீடு திரும்பியபோது குழந்தை ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது. அதன், அந்தரங்க உறுப்பிலிருந்து கடுமையான ரத்தப்போக்கு இருந்துள்ளது. இதனையடுத்து குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

குழந்தையை சோதனை செய்த மருத்துவமனை நிர்வாகம், குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விசாரணையில், சூரஜ் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் மீது (போஸ்கோ) குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தைக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டதுள்ளது.

இந்த சம்பவத்திற்கு டெல்லி பெண்கள் ஆணைய தலைவி சுவாதி ஜெய் ஹிந்த்
கடும் கண்டன தெரிவித்து உள்ளார்

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: