குழந்தையை நெஞ்சில் சுமந்தபடி மாடர்ன் தாயின் வைரலாகும் செயல் அப்படி என்ன செய்து விட்டார்?

0
72

கர்நாடக மாநிலம் மங்களூரில் மார்டன் உடை அணிந்த பெண் ஒருவர் குழந்தை ஒன்றை தன்னுடன் கட்டியவாறே வீதியை சுத்தம் செய்யும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் மங்களூரில் Swachh Mangalore Abhiyan என்னும் பெயரில் நகரை தூய்மைபடுத்தும் பணியை ராமகிருஷ்ணா பொதுப்பணி குழு மேற்கொண்டது.

அப்போது அந்நகரைச் சேர்ந்த பெண்மணி சுதீக்ஷா கிரண் சுவர்ணா, தானாக முன்வந்து அக்குழுவுடன் இணைந்து கொண்டார். பின்னர் வீதியை சுத்தம் செய்யும் பணியில், தனது கணவருடன் சேர்ந்து ஈடுபட்டார்.

அப்போது, மாடர்ன் உடை அணிந்திருந்த அவர், தனது ஒரு வயது மகனை தன் நெஞ்சோடு சேர்த்து கட்டியவாறே வீதியை சுத்தம் செய்தார். இந்த புகைப்படங்களை மங்களூர் சிட்டி என்னும் குழு, தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்தது.

மேலும், அதனுடன் சில வாக்கியங்களையும் பதிவிட்டிருந்தது. அவற்றில் கூறியதாவது, ‘இந்தியா பசுமையாகவும், தூய்மையாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பும் நாம், ஞாயிற்றுக் கிழமைகளில் நிம்மதியாக உறங்கிவிடுகிறோம்.

ஆனால், இந்த பெண் தனது குழந்தையுடன், தானாக முன்வந்து வீதியினை சுத்தம் செய்கிறார். இவரின் வேலை அனைவருக்கும் உத்வேகத்தை அளிக்கிறது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா, இந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த பெண் சமூகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.

அதோடு இவர் தான் உண்மையான ‘Miss India’ என்ற வாக்கியத்துடன் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: