குழந்தையுடன் பெண் தற்கொலை கதி கலங்க வைக்கும் காரணம்!

0
79

குழந்தையுடன் பெண் தற்கொலை கதி கலங்க வைக்கும் காரணம்!

கணவன் மற்றும் உறவினர்கள் கொடுமை தாங்காமல் தாய், மகள் உயிரை விட்ட பரிதாபம் கேரளாவில் நடந்துள்ளது.

கேரளா, மாநிலம் பாலக்காடு அருகே உள்ள ஆலத்தூர் உள்ளது. இந்த ஊரை சேர்ந்த சித்திக், ஆயிஷா தம்பதியின் மகள் நஷீதாவுக்கும் (23), பாசில் (31), என்ற இளைஞருக்கும் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில், திருமணமானது முதலே நஷீதாவை பாசிலும், அவரது உறவினர்களும் தினமும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

இது பற்றி தாய் ஆயிஷாவிடம் சொல்லி நஷிதா வருத்தப்பட்டுள்ளார். இதன் காரணமாக மனமுடைந்த தாயும் மகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இது பற்றி தகவல் அறிந்து வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கணவர் மற்றும் அவரது உறவினர்களை கைது செய்துள்ளனர்.

இதையும் கொஞ்சம் படியுங்கள்!

என்ன தான் சொல்ல வருகிறார் ரஜினி? பாபா முத்திரை, வளைந்த பாம்பு

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பு குறித்த லோகோவின் பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் கடந்த 31-ஆம் திகதி அறிவித்தார்.

நீண்ட வருடங்களாக எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ரஜினி தனது அரசியல் பாதை
ரஜினி தனது அரசியல் பாதை

இந்நிலையில் நேற்று திடீரென தனது ‘www.rajinimandram.org’என்னும் இணையதள பக்கம் மற்றும் பிளே ஸ்டோர் செயலியை வெளியிட்டார் ரஜினி.

அவரது போட்டோஷூட் மற்றும் இணையதள பக்கத்தின் லோகோ என அனைத்திலும் பாபா முத்திரை, அதனை சுற்றி வளைந்த பாம்பு இருப்பதுபோன்ற டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரஜினி தனது அரசியல் பாதை ‘ஆன்மீக அரசியல்’ என கூறியதால், எதற்காக அந்த வளைந்த பாம்பு என விசாரித்த போது பல திடுக்கிடும் பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதில், ரஜினி பயின்ற ராமகிருஷ்ண மடத்தின் லோகோவும் அவரது பாபா முத்திரை லோகோவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் அந்த மடத்தின் நினைவாக அந்த லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே தாமரை மீது பாபா முத்திரை இருப்பது, ரஜினியின் அரசியல் பின்னணியில் பா.ஜ.க. இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதாக விமர்சனம் எழுந்தது, சமூக வலைத்தளங்களில் இது வைரலாக பரவியது.

என்ன தான் சொல்ல வருகிறார் ரஜினி
என்ன தான் சொல்ல வருகிறார் ரஜினி

இதையடுத்து பொது மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் பாபா முத்திரை விவகாரத்தில் அதிரடி மாற்றங்களை ரஜினி செய்துள்ளார். அதன்படி பாபா முத்திரையின் கீழ் இருந்த தாமரை மலர் நீக்கப்பட்டுள்ளது.

பாபா முத்திரை வட்டத்தில் முன்பு கருப்பு கலர் இருந்தது. அதையும் அகற்றி விட்டு நீல நிற வண்ணத்தை சேர்த்துள்ளனர்.

தாமரை மலர் நீக்கப்பட்ட பாபா முத்திரை கீழ் உண்மை, உழைப்பு, உயர்வு என்ற வாசகம் புதிதாக இடம் பிடித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: