குழந்தைகள் வயிற்றில் இருந்தது தாய் வயிற்றில் இல்லை! பெண்ணை பற்றி திடுக் தகவல்!

0
163

தமிழகத்தில் பெண் மற்றும் அவரது குழந்தைகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

குமரி மாவட்டம் நித்திரவிளை அடுத்து உள்ள வள்ளவிளை ததேயுபுரத்தை சேர்ந்தவர் விஜயதாசன். கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வரும் இவருக்கு, பேபி ஷாலினி(27) என்ற மனைவியும், சஞ்சய்(7), பியூ போபர்(5) என்ற இரு மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில் விஜயதாசன் இரு வாரங்களுக்கு முன் கடல் தொழிலுக்காக கேரளா சென்றுள்ளார். இதையடுத்து இவரது மனைவி மற்றும் 2 பிள்ளைகளும் கணபதியான்கடவு பாலம் அருகே தாமிரபரணி ஆற்றில் சடலமாக கிடந்தனர்.

சம்பவத்தை அறிந்த பொலிசார் உடனடியாக வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து உறுதியான தகவல் எதுவும் தெரியாத காரணத்தினால் இது ஒரு மர்மசாவு என்று வழக்கு பதியப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று நடந்த பிரேத பரிசோதனையில் 3 பேரும் கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. சங்கீதாவின் கழுத்து எலும்புகள் உடைந்துள்ளன.

குழந்தைகள் வயிற்றில் தண்ணீர் இருந்தது. சங்கீதாவின் வயிற்றில் தண்ணீர் இல்லை. இதனால் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளது உறுதியாகியுல்ளது.

அதுமட்டுமின்றி முகத்தை பிளாஸ்டிக் கவரால் கட்டி, தண்ணீரில் வீசி உள்ளனர். இரு குழந்தைகளை தண்ணீரில் வீசி கொன்றுள்ளனர்.

இதனால் மர்மச்சாவு என பதிந்த வழக்கை கொலையாக மாற்றி உள்ளனர். மேலும் இது தொடர்பாக பொலிசார் அங்குள்ள 15 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

குழந்தைகள் வயிற்றில் இருந்தது
குழந்தைகள் வயிற்றில் இருந்தது

இதையும் படியுங்கள்!

தங்க கழிப்பறை வேண்டுமா? அவமானப்படுத்தப்பட்ட டிரம்ப் குடும்பம்.

அமெரிக்காவில் உள்ள உலக புகழ்பெற்ற Guggenheim அருங்காட்சியகம் ஜனாதிபதி டிரம்ப் குடும்பத்துக்கு தங்கத்தால் செய்யப்பட்ட கழிப்பறையை கொடுக்க விரும்புவதாக கூறி அவமானப்படுத்தியுள்ளது.

நியூயோர்க்கில் அமைந்துள்ளது Guggenheim அருங்காட்சியகம். இங்கு பிரபல ஓவியர் Vincent Van Gogh 1888-ல் வரைந்த Landscape With Snow என்ற ஓவியம் இருந்த நிலையில் அது தங்களுக்கு வேண்டும் என வெள்ளை மாளிகை சார்பில் கோரப்பட்டிருந்தது.

ஆனால் அதற்கு பதிலாக 18 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட தங்க கழிப்பறையை டிரம்ப் குடும்பம் வசிக்கும் வெள்ளை மாளிக்கைக்கு தர விரும்புவதாக அருங்காட்சியகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து Guggenheim அருங்காட்சியகம் சார்பில் அதன் பொறுப்பாளர் நேன்சி வெள்ளை மாளிகைக்கு இமெயில் அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதில், எங்களிடம் கழிப்பறை உள்ளது. ஜனாதிபதி டிரம்பும், முதல் பெண் மெலானியாவும் வெள்ளை மாளிகையில் அதை பொருத்த விரும்புகிறார்களா என எழுதப்பட்டுள்ளது.

மேலும், கழிப்பறை நல்ல மதிப்புமிக்க பொருள் எனவும் அதன் பராமரிப்புக்கான வழிமுறைகளை நாங்கள் சொல்லி கொடுப்போம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை எழுதிய நேன்சி ஆரம்பம் முதலே டிரம்பை எதிரியாக பார்த்து வந்துள்ளார். ஏற்கனவே தனது வலைப்பக்கத்தில், அடிப்படை மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் மீது டிரம்பின் ஆட்சி தாக்குதல் நடத்துகிறது என விமர்சித்திருந்தார்

இதோடு டிரம்பின் பயண தடை உத்தரவையும் விமர்சித்திருந்த நேன்சி, ஓவிய சமூகத்திலிருந்து இதற்கு நாம் பதிலடி தரவேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

டிரம்ப் நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதிலிருந்தே பல்வேறு சமயங்களில் நேன்சி அவரை விமர்சித்து வருகிறார்.

குறித்த தங்க கழிப்பறைக்கு அமெரிக்கா என பெயர் வைக்கப்பட்ட நிலையில் Guggenheim அருங்காட்சியகத்தில் பொது கழிப்பிடத்தில் கடந்தாண்டு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

தங்க கழிப்பறை வேண்டுமா? அவமானப்படுத்தப்பட்ட டிரம்ப் குடும்பம்.
தங்க கழிப்பறை வேண்டுமா? அவமானப்படுத்தப்பட்ட டிரம்ப் குடும்பம்.
உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: