குழந்தைகளை தவிக்கவிட்டு தற்கொலை செய்து கொண்ட பெற்றோர்!

0
81

தமிழகத்தில் குழந்தைகளை தனியே தவிக்கவிட்டு மனைவியுடன் நிதி நிறுவன அதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் ராம்ஜி பைனான்ஸ் மற்றும் ஏர் டிராவல்ஸ் என்னும் நிறுவனத்தை நடத்தி வந்தவர் ராமச்சந்திரன்.

சிவகங்கையில் வசித்து வந்த ராமச்சந்திரனுக்கு மகேஷ்வரி என்ற மனைவியும் நிவேதாஸ்ரீ(13), அனிதாஸ்ரீ(3) என இரண்டு மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் திருமயத்தில் உள்ள தனது உறவினருக்கு தொலைபேசி மூலம் பேசிவிட்டு ராமச்சந்திரனும் அவரது மனைவியும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தகவலறிந்து பதற்றத்துடன் அவரது இல்லத்திற்கு விரைந்த உறவினர்கள், பொலிசாருக்கு கூட தகவல் தெரிவிக்காமல் உடலை திருமயத்திற்கு கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளனர்.

இந்த தகவலையறிந்த திருமயம் பொலிசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர்.

இரண்டு பெண் குழந்தைகளை தனியே தவிக்கவிட்டு பெற்றோர்கள் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு அப்படி என்ன பிரச்சனை என்பதை கூற உறவினர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: