குளியலறையில் மனைவியின் நிலையை பார்த்த கணவன் அதிர்ச்சியில் ஆடிப்போனார்!

0
320

குளியலறையில் மனைவியின் நிலையை பார்த்த கணவன் அதிர்ச்சியில் ஆடிப்போனார்!

பிரான்ஸ் நாட்டில் உள்ள கீரின்பெல் என்கின்ற பகுதியில் மிஷா என்கின்ற பெண் தனது கணவருடன் வசித்து வந்திருக்கிறார்.

சமப்வம் நடந்த அன்று வேலை முடிந்து வீடு திரும்பிய மிஷாவின் கணவர் பல முறை கதவை தட்டியபோதும் மனைவி திறக்காததால், கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார். அப்போது, அவரது மனைவி குளியலறையில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் தனது மனைவியை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அதனுடன் பொலிசாருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மிஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், மிஷா மயங்கி விழுந்த இடத்திற்கு அருகே அவரது செல்போன் சார்ஜிங் நிலையில் இருந்துள்ளது. ஈர கையுடன் மொபைல் சார்ஜரை தொட்டதால் அவர் மின்சாரம் தாக்கி இறந்துள்ளார் என்று பொலிசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மொபைல் போன் சார்ஜர் ஷாக் அடிக்காது என்று சிலர் விவாதம் செய்யலாம். ஆனால்., துரதிஷ்ட வசமாக இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை நாம் கவனத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.

மொபைல் போன் சார்ஜ் செய்யும் போது நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: