குர்மீத்தால் 200 பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி உள்ளனர்.

0
111

குர்மீத்தால் 200 பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி உள்ளனர்.
முன்னாள் விசாரணை அதிகாரி தகவல்
‘தேரா சச்சா சவுதா’ தலைவர் குர்மீத்தால் 200 பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி உள்ளனர் முன்னாள் விசாரணை அதிகாரி தகவல் தெரிவித்து உள்ளார்.

வன்கொடுமை வழக்கில் கடுங்காவல் தண்டனை பெற்றுள்ள குர்மீத் ராம் ரஹீம் சிங், தன்னுடைய ஆதரவாளர்களை எப்படி வன்முறையில் ஈடுபட தூண்டினார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பாலியல் பலாத்கார வழக்கில் ‘தேரா சச்சா சவுதா’ தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் பயங்கர கலவரம் ஏற்பட்டது. இந்த வன்முறையில் 38-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். வன்முறையின் போது குர்மீத்தின் ஆதரவாளர்கள் வாகனங்களுக்கு தீ வைத்ததோடு, பொதுச் சொத்துக்களையும் பெருமளவில் சேதப்படுத்தினர்.

நீதிமன்றத்தில் இருந்து சிறைச்சாலைக்கு அழைத்து செல்லும் போது குர்மீத் அடம்பிடித்து, சிவப்பு நிற பையை எடுத்து சென்றிருக்கிறார். சிவப்பு நிற பையை கண்டால் வன்முறையில் ஈடுபட வேண்டும் என முன்கூட்டியே அவர் ஆதரவாளர்களிடம் கூறியிருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாலியல் பலாத்கார வழக்கின் விசாராணை அதிகாரி நாராயண்டிஐஜி தற்போது ஓய்வு பெற்று விட்டார். விசாரணையின் போது தன்னுடைய குழுவுக்கு குர்மீத் ஆதரவாளர்களிடமிருந்து வந்த எதிர்ப்பையும் அச்சுறுத்தலும் வந்தது குறித்து பேசினார்.

சிர்ஸாவில் உள்ள தேரா சச்சா சவுதா வளாகத்திற்குள் சிங் வாழ்ந்ததைப் பற்றி அவர் விரிவான விவரங்களை வெளியிட்டுள்ளார். அவர் ஆணுறைகளின் தொகுப்பைக் சேகரித்து வைத்து இருந்தார். மேலும் அவரது அறையில் கருத்தடை சாதனங்கள் இருந்தது . அவர் ஒரு வெறி பிடித்தவர், உண்மையான மிருகம் போன்று. 1999 முதல் 2002 வரை தேரா வளாகத்தில் 200 பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி உள்ளனர். ஆனால் பாதிக்கபட்ட 10 பெண்களையே சிபிஐயால் கண்டறிய முடிந்தது. முடிவாக 2 பெண்களை கொண்டே வழக்குப்பதிவு செய்ய முடிந்தது என கூறினார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: