குடி போதையின் போது பேசியதை ஏன் மறந்து போகிறார்கள் என்று தெரியுமா

0
171

குடி போதையின் போது பேசியதை ஏன் மறந்து போகிறார்கள் என்று தெரியுமா?

நம் உடலில் வெளிப்புறமாக நடக்கும் விடயங்கள் மட்டுமே நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் நம் உடலுக்கு உள்ளே இருக்கும் உறுப்புகளின் செயல்பாடுகள் பற்றி யாரும் அறிந்திருக்க முடியாது.

போதையில் பேசிய விடயங்கள் மறந்து போவது ஏன்?

குடி போதையில் ஒருவர் இருக்கும் போது, எதையும் மறக்க மாட்டார்கள். ஆனால், குடித்த பின் தூங்கி எழும் போது ஒரு பிளான்க் அவுட் (Blank Out) நிகழ்வு நடக்கும்.

இந்த நிகழ்வின் போது நினைவுகளை சேமிக்க மூளை தவறிவிடும். இதனால் குடித்த போது நீங்கள் பேசிய சில விடயங்களை அதன் பின்பு மறக்க நேரிடுகிறது.

மனித உடல் பற்றிய சில உண்மைகள்

மனித உடலில் இருக்கும் மொத்த ரத்த நாளத்தின் நீளம் 96,000 கிலோமீட்டர்.
உடலில் உள்ள எலும்புகளில், கைகளில் அதிகம் உள்ளது. நமது இரண்டு கைகள் மற்றும் கை விரல்களில் மட்டுமே 54 எலும்புகள் உள்ளது.
உலகில் உள்ள 10% ஆண்கள் மற்றும் 8% பெண்கள் இடது கை பழக்கம் கொண்டவர்கள்.
மனித மூளையின் செல்களில் ஏற்படும் சேதத்தை முற்றிலுமாக எப்போதுமே சரிசெய்ய முடியாது.
குழந்தைகள் பிறக்கும் போது நுரையீரல் பிங்க் நிறத்தில் இருக்கும். சுவாசிக்க, சுவாசிக்க, காற்றில் இருந்து கலந்து வரும் மாசு காரணமாக தான் நுரையீரல் நிறம் கருமையாக மாறும்.
சராசரியாக ஒரு பெண் 60 வயதை எட்டும் போது, 450 குழந்தைகளை பெற்றெடுக்க தேவையான முட்டைகளை வெளியிட்டிருப்பாள்.
ஒவ்வொரு நிமிடமும் மனித உடலில் நூறு மில்லியன் செல்கள் இறந்து போகின்றது.
தினசரி நம் உடலில் எரிக்கும் கலோரிகளில் 20% மூளையால் எரிக்கப்படுகிறது. உடலால் மட்டும் வெறும் 2% கலோரிகள் தான் எரிக்கப்படுகிறது.
நீங்கள் பிறக்கும் 6 மாதங்களுக்கு முன் இருந்தே பற்கள் வளர துடங்கிவிடும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: