கிளிநொச்சி கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த யாழ். இளைஞர்களின் பெயர் விபரம் வெளிவந்தது!

0
67

கிளிநொச்சி – மாங்குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த யாழ். இளைஞர்களின் பெயர் விபரங்கள் வெளியாகி உள்ளன.

குறித்த சம்பவத்தில்,

யாழ். அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த நவரத்தினம் அருண் (வயது 24),

சந்திரசேகரம் ஜெயசந்திரன் (வயது 36),

யாழ்.மாலு சந்தி பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியம் இந்துகன் (வயது 19)

யாழ். பருத்திதுறையை சேர்ந்த சின்னத்துரை கிருஸ்ணரூபன் (வயது 19) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

மேலும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 18 வயதுடைய பி.துவாரகன் தொடர்ந்தும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி – மாங்குளம், கொக்காவில் ஏ9 வீதியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் ரக வாகனம் ஒன்று, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஹயஸ் ரக வாகனத்தில் பயணித்த நால்வர் சம்பவ இடத்திலேயே உயிழிரந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: