கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய ஜெர்சி அறிமுகம்!

0
84

கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய ஜெர்சி அறிமுகம்!

பல்வேறு மாற்றங்களுடன் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்திய அணி ஜெர்சியில் நிறம், விளம்பரதாரர் லோகோ மற்றும் புதிதாக இடம்பெற்றுள்ள நட்சத்திரம் என பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விளையாட்டு வீரர்களின் உடையில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும்.இதன்படி லோகோவுக்கு மேலே இடம்பெற்றுள்ள மூன்று நட்சத்திரங்கள் ஏன் என்பதற்கு பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.

அதாவது, இந்திய கிரிக்கெட் அணி இதுவரை மூன்று உலகக் கிண்ணத்தை வென்றுள்ளது என்பதை குறிக்கும் விதமாக பொறிக்கப்பட்டுள்ளது.1983ல் கபில்தேவ் தலைமையில், 2007ல் டோனி தலைமையில் டி20 மற்றும் 2011ல் டோனி தலைமையில் உலகக் கிண்ணத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: