காதல் மனைவியை திருமணமான 20 நாளில் கொலை செய்த கணவன்!

0
70

தமிழ்நாட்டில் காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணை 20 நாளில் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தின் எரகுடியை சேர்ந்தவர் சரண்யா (19). இரண்டாம் ஆண்டு கல்லூரி படிப்பு படித்து வந்தார்.

அதே ஊரை சேர்ந்த தனது தாய் மாமா விஜய்யை (23) காதலித்து வந்த சரண்யா கடந்த 1-ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறி அவரை திருமணம் செய்து கொண்டார்.

விஜய் வீட்டின் மாடியிலேயே புதுமண தம்பதி வசித்து வந்த நிலையில், விஜய்க்கு சரண்யா தவிர வேறு பெண்களுடனும் பழக்கம் இருந்துள்ளது.

இது குறித்து கணவரிடம் சரண்யா கேட்க இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் 21-ஆம் திகதி நள்ளிரவு இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த விஜய் பிளேடால் சரண்யாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

நேற்று காலை விஜயின் தாயார் மாடிக்கு சென்று பார்த்த போது, சரண்யா இறந்து கிடந்த நிலையில் விஜய் தூங்கி கொண்டிருந்தார்.

இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் விஜய்யிடம் விசாரணை நடத்தியபோது முதலில் சரண்யா தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

பின், சரண்யாவுக்கு பலருடன் பழக்கம் இருந்ததால் கொலை செய்ததாக தெரிவித்த நிலையில் அவரை கைது செய்த பொலிசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: