காதலியின் வீட்டின் பின்புறத்தில் மறைந்திருந்த கள்ளக்காதலன்

0
72

காதலியின் வீட்டின் பின்புறத்தில் மறைந்திருந்த கள்ளக்காதலன்! பின்னர் நடந்த விபரீதம்!

கள்ளக்காதலியை சுட்டு கொலை செய்ய முயற்சித்த நபரொருவரை தேடி கஹடகஸ்திகிலிய காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று இரவு தனது கள்ளக்காதலியின் வீட்டின் பின்புறத்தில் மறைந்திருந்த குறித்த நபர் குறித்த பெண் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளார்.

காவற்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், குறித்த நபர் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர் என தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்துள்ள குறித்த பெண் தற்போதைய நிலையில் , அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: