காதலிக்காக 16 வயது சிறுவன் ஆடிய நாடகம் அம்பலம். அப்படி என்னதான் செய்தான்.

0
190

காதலிக்காக 16 வயது சிறுவன் ஆடிய நாடகம் அம்பலம். அப்படி என்னதான் செய்தான்.

மும்பையில் உள்ள ஒரு சிறுவன் தனது காதலிக்கு 50 லட்சம் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு பெரிய நாடகமே நடத்தியுள்ளான் .
காதலியின் குடும்ப பொருளாதார சூழல் சரியில்லாத காரணத்தால், சொந்த அப்பாவிடம் தான் கடத்தப்பட்டது போல நடித்து ஐம்பது இலட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய 16 வயது சிறுவனின் கடத்தல் நாடகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் சக்கி நாகா (Saki Naka) எனும் பகுதியை சேர்ந்த 16 வயது மைனர் சிறுவன் கடத்தப்பட்டதாக தகவல் தெரியவர, அந்த சிறுவனின் குடும்பத்தார் க்ரைம் பிரான்ச் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
கடத்தல் காரன் என கால் செய்து மிரட்டிய நபர், உன் பையன் எங்களிடம் தான் உள்ளான், நீ குறித்த நேரத்தில் ஐம்பது இலட்சம் பணத்தை எங்களிடம் கொடுக்க வேண்டும். இது குறித்து போலீசிடம் கூற கூடாது என மிரட்டியுள்ளான்.
அந்த சிறுவனின் தந்தை, மகனை மீட்க தேவையான பணத்தைஎடுத்துக் கொண்டு, அவர்கள் அழைத்த இடத்திற்கு சென்றார். அதே நேரத்தில், வழக்கின் அபாயத்தை அறிந்த காவல் துறை, அதே நேர்கோட்டில் விசாரணையை துவங்கியது. அப்போது, கால் வந்த செல்போன் டவரை ட்ரேஸ் செய்த போது, கடத்தல் காரனின் இருப்பிடம் அறியப்பட்டது.
Related image
கடத்தல் காரன் இருந்ததாக கண்டறியப்பட்ட இடத்திற்கு காவல் துறை சென்ற போது, அந்த லாட்ஜ் அறையில் 19 வயதுமிக்க இளைஞர் ஒருவன் இருந்தான். அவனிடம் விசாரித்த போது தான், அவன் அந்த 16 வயது சிறுவனின் நண்பன் என்பது தெரியவந்தது.

அந்த 16 வயது சிறுவனின் யோசனையின் பேரில் தான் இந்த கடத்தல் நாடகம் அரங்கேறியுள்ளது என்றும். அந்த சிறுவனின் காதலியின் குடும்பத்தார் பொருளாதார நெருக்கடியில் இருப்பதால், அந்த பெண்ணுக்கு உதவ இப்படி ஒரு கடத்தல் நாடகம் போட்டதாக விசாரணையில் தகவல் கிடைத்தது.
காவல் துறையினர் அந்த சிறுவனையும், இளைஞரையும் தொடர்ந்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: