காதலா!! நட்பா!! மீண்டும் ஒருமுறை அவனை முத்தமிட ஆசை!!.

0
165

காதலா!! நட்பா!! மீண்டும் ஒருமுறை அவனை முத்தமிட ஆசை!!.

நாங்கள் வெறும் நண்பர்கள் மட்டுமல்ல. கொஞ்சம் அதற்கும் மேலானாவர்கள். நாங்கள் இருவரும் பேசிக் கொள்ள மிகவும் விரும்புவோம். பெரிதாக வாட்ஸ்அப், மெசேஞ்சர் என செய்திகள் தட்டிவிட்டு பொழுதை கழித்ததில்லை. மொட்டை மாடியில் உட்கார்ந்து கொண்டு பேசுதல் எங்களுக்கு இருவருக்கும் பிடித்தமான ஒன்று. ஒருவேளை நாங்கள் இருவரும் சந்திப்பதில் ஏதேனும் கடினம் அல்லது சிக்கல்கள் இருந்தால் மட்டுமே அரிதாக குறுஞ்செய்தியில் உரையாடுவோம். நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் போது அமைதி நிலவினாலும் கூட, நாங்கள் சௌகரியமாக தான் உணர்ந்தோம்..

இடமாற்றம்.
நான் வேறு நகரத்திற்கு மாற்றம் பெற்று செல்கிறேன் என அவனிடம் கூறினேன். அவனால் என்னுடன் வர முடியாது. ஏனெனில் அவன் என்னைவிட ஒரு வருடம் சிறியவன். சும்மா கலாய்த்து பார்த்தேன். அப்போது தான் நாங்கள் இருவரும் அவ்வளவு நெருக்கமாக கட்டியணைத்து கொண்டோம்.

காதலர்களாக.
அப்போது தான், இந்த இடத்தில் ஒரு காதலர்களாக இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும் என தன் விருப்பத்தை கூறினான். இருவரும் நகைத்து கொண்டோம். பிறகு நிறைய பேசினோம். ஒருவரை ஒருவர் தழுவி கொண்டு விடைப்பெற்று சென்றோம். ஹிக்கி! உனக்கு ஹிக்கி என்றால் என்ன தெரியுமா? என்று என்னிடம் கேட்டான், தெரியும் என்றேன். ஹிக்கி என்றால் லவ் பைட். அதை கொடுக்க தான் அவன் கேட்டான் என தெரியும். ஆனால், எனது பார்வையை கண்டதும் அவனது எண்ணம் மாறிவிட்டது. இது தாமதம் தான்… திரும்பினேன்… ஓடி சென்று அவனை ஐந்து நிமிடம் கட்டியணைத்த படியே நின்றிருந்தேன். மீண்டும் அவன் கேட்டான்.., எனக்கொரு ஹிக்கி தருவாயா? என… பல யோசனைகள் மனதுள் ஓட ஆரம்பித்தது.

தோல்வி
ஹிக்கி தர முயற்சித்தேன். ஆனால், அது தோல்வியில் தான் முடிந்தது. ரொமான்டிக்காக முடிய வேண்டியது, நகைச்சுவையாக முடிந்தது. அவனது கண்ணாடியை கழற்றினான்., நானும் எனது கண்ணாடியை கழற்றினேன். அடுத்த நொடி, இருவரும் முத்தமிட்டுக் கொண்டோம். பத்து நிமிடம் கழிந்து அவன் முன்னேறி செல்வான் என நினைத்தேன்.

தயக்கம்
எனக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது. அதிலிருந்து வெளிவந்தேன். எனது கண்ணாடியை எடுத்தி மாட்டிக் கொண்டு நகர்ந்தேன். நான் மீண்டும் திரும்பி பார்த்த போது அவன் அவனது முகத்தை மூடியபடி நின்றுக் கொண்டிருந்தான். நான் வீடு திரும்பினேன். நடந்த விஷயங்கள் பற்றி எனது நெருங்கிய தோழியிடம் கூறினான். அவள், அவனிடம் தெளிவாக பேசி இதற்கு ஒரு தீர்வுக் காண கூறினால். நான் அவனிடம் இதுகுறித்து பேசினேன். ஆனால், அவன் என்னை மீண்டும் சந்திக்க ஒப்புக்கொள்ளவில்லை.

மறந்துவிடு
அவன் நடந்ததை எல்லாம் மறந்துவிடு என கூறினான். ஆனால், என்னால் முடியவில்லை. மீண்டும் ஒருமுறை அவனை முத்தமிட ஆசை இருந்தது. ஆனால், அவன் நடந்த சம்பவத்தை நினைத்து குற்றவுணர்வு கொண்டிருக்கிறான் என்பதை அறிந்தேன். ஆகையால், அவன் மீண்டும் என்னை சந்திக்கவும் சம்மதிக்கவில்லை. அவனை இழக்க எனக்கு விருப்பமில்லை. என்ன இருந்தாலும், அவன் எனது நெருங்கிய தோழன்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: