காதலனுடன் திருமணம் செய்யாமலே வாழ்ந்த காதலி.! ஏமாற்ற நினைத்த காதலன் செய்த காரியம்.!

0
61

காதலனுடன் திருமணம் செய்யாமலே வாழ்ந்த காதலி.! ஏமாற்ற நினைத்த காதலன் செய்த காரியம்.!
ஆந்திரா மாநிலம் தாண்டா கிராமத்தை சேர்ந்த வாலிபர் சந்திர சேகர் . இவரும் திவ்யா என்ற பெண்ணும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர் .

பின்னர் பணி நிமிர்த்தம் காரணமாக ஐதராபாத் சென்ற இருவரும் திருமணம் செய்யாமலேயே கடந்த 3 ஆண்டுகளாக ஒன்றாக ஒரே வீட்டிலே வாழ்ந்து வந்துள்ளனர்.

இதனையடுத்து ஒரு நாள் தனது சொந்த ஊருக்கு வந்த சந்திரசேகர் திடீரென திவ்யவுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.

பின்னர் சந்திரசேகருக்கு வேறொரு பெண்ணுக்கு திருமணம் நடக்க உள்ளதாக தகவல் அறிந்த திவ்யா தனது உறவினர்களுடன் சென்று சந்திரசேகரின் வீட்டை முற்றுகையிட்டார்.

அப்போது சந்திர சேகர் தனது பெற்றோர்கள் நம் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

அப்போது இதனை கேட்டு ஆத்திரமடைந்த திவ்யா மற்றும் அவரது உறவினர்கள் சந்திரசேகரின் வீட்டாரை தாக்கியுள்ளனர்.

மேலும் காதலித்து ஏமாற்றி விட்டு ஒன்றும் தெரியாதது போல் இருந்த சந்திரசேகரை திவ்யா தனது காலணியால் தாக்கியுள்ளார்.

இதானல் பின்னர் திருமணத்திற்கு சந்திரசேகர் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள ஒரு கோயிலில் திவ்யாவுக்கு சந்திர சேகருக்கும் இருவீட்டார் முன்னிலையில் திருமணம் நடந்தது.

காதலித்து ஏமாற்ற நினைத்த காதலனையே கரம் பிடித்த திவ்யாவுக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: