காதலனுடன் இருந்ததை தந்தை பார்த்துவிட்டதால் தந்தையை கொலை செய்த மகள்!

0
79

டெல்லியில் தனது மகள் காதலனுடன் இருந்ததை பார்த்து கண்டித்த தந்தை, அவரது வீட்டின் மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோவை சேர்ந்த விஸ்வநாத் என்பவர் மொபைல் கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று, இவரது மகள் திவ்யா அவரது காதலனான தர்மேந்திராவுடன் இரவு நேரத்தில் ஒன்றாக இருந்துள்ளார்.

இதனைப்பார்த்த, விஸ்வநாத் தனது மகளை கண்டித்து வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் அது கைகலப்பாக ஆரம்பிக்காவே திவ்யா, தனது காதலனுடன் சேர்ந்து தந்தையை அடித்து, 3வது மாடியில் இருந்து தள்ளியுள்ளார்.

இதில், கீழே விழுந்த விஸ்வநாத்தை அவரது மனைவி காய்த்ரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார், ஆனால் காயம் காரணமாக விஸ்வநாத் உயிரிழந்துவிட்டார்.

இந்த சம்பவத்தால் திவ்யாவின் காதலன் தர்மேந்திரா தப்பியோடிவிட்டார், விஸ்வநாத்தின் மனைவி காயத்ரி அளித்த புகாரின் பேரில், காதலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, திவ்யா கைது செய்யப்பட்டுள்ளதாவும், தப்பியோடிய தர்மேந்திராவை தேடி வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: