காதலனால் இலங்கையில் யுவதிக்கு நேர்ந்த கொடூரம் பின் யுவதியின் அதிரடி முடிவு!

0
72

யுவதி ஒருவரின் நிர்வாண புகைப்படத்தினை பேஸ்புக் சமூக வலைதளத்தில் வெளியிட்ட குற்றத்தின் காரணமாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் இதுவரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் தங்கலை பிரதேச சிறுவர் மற்றும் பெண்கள் பணியக பிரிவினால் கைது செய்ப்பட்டார்.

அதன் பின்னர் தங்காலை நீதவான் நீதினமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தொடை பிரதேசத்தினை சேர்ந்த 23 வயதுடைய யுவதி, தனது காதலனுக்கு எதிராக குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு வழங்கிய முறைப்பாட்டிற்கமைய, குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள்மை குறிப்பிடத்தக்கது.

தனது அனுமதி இல்லாமல் தனது நிர்வாண புகைப்படத்தினை காதலன், இவ்வாறு பேஸ்புக் தளத்தில் வெளியிட்டுள்ளதாக குறித்த யுவதி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்ட நிலையில், சந்தேக நபரான இளைஞர் குற்றத்தினை ஒப்புக் கொண்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: