கல்லூரி மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்த சகமாணவன்! வெளிவந்த தகவல்

0
110

கல்லூரி மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்த சகமாணவன்! வெளிவந்த தகவல்

சென்னை மாமல்லபுரம் அருகே கல்லூரி மாணவிகள் குளிப்பதை ஜன்னல் வழியாக வீடியோ எடுத்த கல்லூரி மாணவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மாமல்லபுரத்தை அடுத்த மணமையில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் சுமார் 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் பூஞ்சேரி கூட்டுரோடு அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து விடுதி போல் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதே அடுக்குமாடி குடியிருப்பில் அதே கல்லூரியில் படிக்கும் மாணவர்களும் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர்.

இந்த நிலையில், அதே கல்லூரியில் பயிலும் ஆந்திராவை சேர்ந்த மாணவன் மாணவிகள், குளிக்கும் போது ஜன்னல் வழியாக திருட்டுத்தனமாக தனது செல்போனில் படமெடுத்துள்ளார். இந்த தகவல் கல்லூரி முழுவதும் தீயாக பரவியது.

மேலும், அந்த வீடியோக்களை லேப்டாப்பில் பதிவு செய்திருப்பதும் தெரிய வந்தது. இதனை அறிந்த சகமாணவிகள் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் மாணவிகளிடம் சொல்லியிருக்கிறார்கள். அதிர்ச்சி அடைந்த அவர்கள் அந்த மாணவனின் அறைக்கு சென்று பார்த்தனர்.

ஆனால், தகவல் தெரிந்ததும் தாம் மாட்டிக் கொள்வோம் என நினைத்து மாணவன் தப்பித்து சென்றுள்ளான். இது பற்றி மாமல்லபுரம் போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மாயமான மாணவர் ஆந்திரா சித்தூரை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. அவர் விட்டுச் சென்ற லேப்டாப்பை போலீசார் சோதனை செய்ய முயன்றனர். ஆனால், அதில் பாஸ்வேர்டு போட்டிருப்பதால் அதை திறக்க முடியவில்லை.

தப்பித்துப் போன மாணவனை கைது செய்த போலீஸார், அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.அதன் பின்னர் தான் மாணவிகள் குளிப்பதை வீடியோ படம் எடுத்தாரா என்பது பற்றிய விவரம் தெரிய வரும். அவருடன் தங்கி இருக்கும் நண்பர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே, குற்றப் புகாரில் சிக்கிய மாணவனை, தனியார் கல்லூரி நிர்வாகம் இடை நீக்கம் செய்துள்ளது குறிப்பிடதக்கது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: