கற்பழிக்க வந்த கய‌வரிடம் இருந்து தாயை காப்பற்ற முயன்ற சிறுவன் குத்தி கொலை!

0
68

கற்பழிப்பு முயற்சியில் கயவர்களிடம் இருந்து தாயை காப்பாற்ற முயன்ற சிறுவன் குத்தி கொலை செய்யப்பட்டார்.

குஜராத் தலைநகர் ஆமதாபாத் கிழக்கு பகுதியில் ஒதாவ் என்ற இடத்தில் சாலையோரத்தில் ஏழைகள் தங்கியுள்ளனர். இங்கு ஒரு பெண் தனது கணவர் மற்றும் 13 வயது மகனுடன் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் குடிபோதையில் வந்த தாகூர் என்ற வாலிபர் சாலையோரத்தில் இருந்த பெண்ணை மானபங்கம் செய்து கற்பழிப்பு முயற்சியில் ஈடுபட்டான்.

உடனே அருகில் இருந்தவர் கூடி சத்தம் போட்டனர். வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி தனது நண்பர்கள் சிலரை அழைத்துக் கொண்டு அங்கு வந்தான். மீண்டும் அவர்கள் அந்த பெண்ணிடம் கலாட்டா செய்து தகாத முயற்சியில் நடக்க முயன்றார்கள்.

இந்த பெண்ணின் கணவர் மற்றும் 13 வயது சிறுவன் ஆகியோர் தட்டிக் கேட்டதுடன் அவளை அவனிடம் இருந்து காப்பாற்ற முயன்றனர். அப்போது தாகூரும் அவனது நண்பர்களும் பெண்ணின் கணவரையும், சிறுவனையும் தாக்கினார்கள். இதில் சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு உயிர் இழந்தான். குற்றவாளிகள் உடனே தப்பி ஓடிவிட்டனர்.

சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடியதில் தாகூர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். தாகூரின் தந்தை போலீஸ்காரர் ஆவார். மற்றவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

இந்த தாக்குதல் பற்றி போலீசார் கூறுகையில், அந்த பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்து வந்தனர். அவர்களை காலி செய்யச்சொன்ன போதுதான் மோதல் ஏற்பட்டு இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: