கர்ப்பிணியை மழையில் நனையவிட்டு வேடிக்கை பார்த்த கணவன்.

0
95

கர்ப்பிணியை மழையில் நனையவிட்டு வேடிக்கை பார்த்த கணவன்.

குடும்பச் சண்டையால் கர்ப்பிணியை வீட்டை விட்டு வெளியில் துரத்திய கணவன், அவர் மழையில் நனைவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

இந்தத் துயரச் சம்பவம் பண்டாரகம – கல்வதுடே பிரதேசத்தில் நடந்தது.

கர்ப்பிணி பலத்த மழையில் நனைந்து கொண்டிருப்பதை அவதானித்த அயலவர்கள் பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்துக்குத் தகவல் வழங்கினர்.

அங்கு விரைந்த பொலிஸார் கர்ப்பிணியிடம் நடந்தவற்றைக் கேட்டார். பின்னர் அவரது கணவரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அவர் பொலிஸாருடன் முரண்பட்டார். அதனையடுத்து கணவர் கைது செய்யப்பட்டார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: