கருப்பாக இருப்பதாக கிண்டல் செய்ததால் தீ வைத்து எரித்துக்கொண்ட மாணவி!

0
69

தெலுங்கானா மாநிலத்தில் 9 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள் தன்னை கிண்டல் செய்த காரணத்தால் மனமுடைந்து தனக்குத்தானே தீவைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

லாவண்யா (14) என்ற மாணவி, Domadugu கிராமத்தில் உள்ள Pragathi High School- இல் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.

இவருடன் படிக்கும் சக மாணவர்கள், லாவண்யாவின் தோல் நிறத்தை கிண்டல் செய்துள்ளனர், கருப்பாக இருக்கிறாய்… பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்கிறது என அடிக்கடி கிண்டல் செய்துள்ளனர்.

இதனால், மனமுடைந்த லாவண்யா இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியரிடம் புகார் அளித்தும், அவர் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த கிண்டல் தொடர்ந்து கொண்டே இருந்ததால், மனமுடைந்த லாவண்யா, தனது வீட்டில் தனக்குத்தானே தீவைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில், இவரது உடல் 45 சதவீதம் எரிந்துள்ளது.

தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லாவண்யாவிடம், சிகிச்சைக்கு பின்னர் வாக்குமூலம் பெறப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: