கணவரை கண்டுபிடிக்க முயன்ற பெண்ணுக்கு நடந்த கொடுமை உதவி செய்வதாக கூறி நண்பனின் மனைவியை கற்பழித்த வாலிபர்..!

0
99

கணவரை கண்டுபிடிக்க முயன்ற பெண்ணுக்கு நடந்த கொடுமை உதவி செய்வதாக கூறி நண்பனின் மனைவியை கற்பழித்த வாலிபர்..!
பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருபவர் திருமணமான 26 வயது பெண்.

இவருடைய கணவர் சமீபத்தில் காணாமல் போயுள்ளார். இதனால் கணவரை கண்டுபிடித்து தரும்படி அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த மஞ்சு என்ற வாலிபர் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு உதவி செய்வதாக கூறியுள்ளார்.

இதனை நம்பிய அந்த பெண்ணும் அந்த வாலிபருக்கு ரூ.2 ஆயிரம் பணத்தையும் ஒரு செல்போனையும் வாங்கி கொடுத்துள்ளார்.

இதனையடுத்து ஒரு நாள் அந்த வாலிபர் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு காணாமல் போன கணவன் பற்றி தகவல் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.

இதனை நம்பிய அந்த பெண்ணும் அந்த வாலிபர் சொன்ன இடத்துக்கு தனியாக சென்றுள்ளார்.

அப்போது அந்த வாலிபர் அவரை அங்கிருந்து வேறொரு இடத்துக்கு அழைத்து சென்று கத்தியை காட்டி மிரட்டி அந்த பெண்ணை கற்பழித்துள்ளார்.

பின்னர் தாம் ஏமாற்று பட்டு விட்டோம் என்பதை அறிந்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான மஞ்சு என்ற அந்த வாலிபரையும் தேடி வருகின்றனர்.

மேலும் அந்த நபர் புகார் அளித்த பெண்ணின் கணவரின் நண்பர் என்பது தெரிய வந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: