கணவரிடம், மனைவியிடம் கடந்த காதல் வாழ்க்கையை சொல்லலாமா? பரம ரகசியம் பற்றி கணவர், மனைவி கிட்ட சொல்லலாமா?

0
447

கணவரிடம் மனைவியிடம் கடந்த காதல் வாழ்க்கையை சொல்லலாமா? பரம ரகசியம் பற்றி கணவர் மனைவி கிட்ட சொல்லலாமா?

எந்த விசயத்தையும் யாரிடம் எதற்காக சொல்கிறோம் என்பது இருக்கிறது. காதலிப்பவர்களாகட்டும், திருமணமானவர்களாகட்டும் தங்களுக்குள் எந்த ஒரு ஒளிவுமறைவின்றி இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அப்படி இருப்பதால் பல பிரச்சனைகள் வரக்கூடும். குடும்ப வாழ்க்கையிலும் சில ஒளிவு மறைவுகள் இருந்தால்தான் சிக்கல்கள் இன்றி இருக்கும். காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ எதுவாக இருந்தாலும் மனைவியானவர் தங்கள் கணவரிடம் சில விசயங்களை மறைக்கத்தான் வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். என்னென்ன விசயங்களை மறைக்கவேண்டும் என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். படியுங்களேன்.

பேஸ்புக் அக்கவுண்ட் பேஸ்புக் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. அந்த பேஸ்புக்கின் மூலம் நிறைய பேர் நண்பர்கள் ஆவார்கள். எந்த ஒரு ஆணும் தன் துணைவிக்கு ஆண் நண்பர் இருப்பதையும், ஒரு பெண்ணும் தன் துணைவனுக்கு பெண் நண்பர் இருப்பதையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆகவே தனது கணவருக்கு பேஸ்புக் அக்கவுண்ட் பாஸ்வேர்டு மறைப்பதில் தவறில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

மெசேஜ் சாட்டிங் நண்பர்களுடன் இணையதளத்திலோ, மொபைலிலோ சாட் பண்ணும் போது, அதைப் பற்றி தங்கள் வாழ்க்கைத்துணையிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை. ஏனெனில் இதுவே சில சமயங்களில் கணவரின் மனதில் தவறான எண்ணங்கள் தோன்ற வழிவகுக்கும். பின்னர் அதுவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆபத்தாகிவிடும். ஆகவே அதைப் பற்றி பேசாமல் இருந்தால் நலம்.

நண்பர்களின் போன் நம்பர் நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையை நம்பலாம், அதற்காக நண்பர்களின் மெபைல் நம்பர் தருவது சில சமயங்களில் ரொம்ப ரிஸ்க். ஏனென்றால் நண்பர்கள் விளையாட்டாக ஏதாவது பேச, சில சமயம் அது வினையாக மாறிவிடும். நாம எல்லாரையும் நம்பலாம், ஆனா கண்மூடித்தனமா நம்பக் கூடாது. இதுல ரொம்பவே கவனமா இருக்கணும்.

மறைத்த தகவல்கள்
தெரிந்தோ, தெரியாமலோ முதலில் நாம் செய்த தவறை பற்றி கணவரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நீங்கள் அவர்களுக்கு உண்மையாக இருந்தால், இதைப் பற்றி சொல்லாமல் இருக்கிறோம் என்று கவலை கொள்ள வேண்டாம். மீறி கூறினால், வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டு வாழ்க்கையே கேள்விக் குறியாகிவிடும். ஆகவே இவற்றை பற்றி பகிர்வதைத் தவிர்க்கவும். வாழ்க்கையானது இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்றால் ஒரு சில விஷயங்களை மறைப்பதில் தவறில்லை. ஆகவே, மேலே சொன்ன எல்லாவற்றையும் கணவரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தால், வாழ்க்கையானது சந்தோஷமாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

பகிரக்கூடியவை சொல்லும் முறைகள் முறைகள்

பெண்கள் அனைவரும் தாங்கள் காதலித்தவரையே திருமணம் செய்து கொள்வதில்லை. ஒரு சில குடும்ப சூழ்நிலைகளால் காதலித்தவரை மணக்க முடியாமல் போகிறது. அப்படி இருக்கும் போது, அவர்கள் வீட்டில் பார்த்து மணம் முடிக்கும் கணவருக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

ஆனால் கல்யாணத்திற்குப் பின்னர் தங்களது கணவரிடம் தங்களின் கடந்த, கசந்த காலத்தை கூறலாமா, வேண்டாமா என தங்களுக்குள் பெரிய அளவில் மனப்போராட்டமே நடத்துவார்கள்.

சொன்னால் பிரச்சனை வருமா? நாம் சொல்லாமல் வேறு யாராவது சொல்லி தெரிந்துவிட்டால், வாழ்க்கை கேள்வி குறியாகிவிடுமே! என்று ஒரு தெளிவான முடிவு தெரியாமல் குற்ற உணர்வுடன் வாழ்க்கையை தொடர வேண்டியிருக்கும். அவர்களுக்கு சரியான ஆலோசனை கூற அருகில் யாரும் இல்லாததால், குற்ற உணர்வோடு மனப்போராட்டத்தோடு வாழ்வார்கள்.

ஆண்கள் தங்கள் கடந்த காதல் வாழ்க்கையை ஈஸியாக சொல்லிவிடுவார்கள். அதைப் பெண்கள் பெரிய விஷயமாக கொண்டால் வாழ்க்கை தான் கேள்விக் குறியாகிவிடும். அதையே பெண்கள் கூறினால், அதனை ஆண்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆண்களுக்கு அத்தகைய மனப்பக்குவம் இல்லை. ஏனென்றால் அதற்கு நமது சமூகம் தான் காரணம்.

ஒரு ஆண் எத்தனை திருமணம் செய்தாலும் அவர்களின் மதிப்பு குறைவதில்லை. ஆனால் பெண்கள் அப்படியில்லை. காதல் செய்துவிட்டால் அவளை சமூகம் தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கும்.

ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி, தங்களது கடந்த காலத்தை ஒளிவுமறைவின்றி பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதே ஆரோக்கியமானது. இதை இரண்டு பேருமே பரந்த மனதுடன் ஏற்றுக் கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டியது அவசியம். அதுதான் இருவருக்கும் எதிரில் காத்துள்ள நீண்ட நெடிய வாழ்க்கைப் பயணத்தை இனிமையாக்க உதவும்.

மேலும் தங்களது திருமணத்திற்கு முந்தைய வாழ்க்கை குறித்து வேறு யாராவது ‘நலம் விரும்பிகள்’ மாறி மாறிப் போட்டுக் கொடுத்து வாழ்க்கையைக் கெடுக்க வாய்ப்பில்லாமலும் தடுக்க முடியும். கணவனானாலும் சரி, மனைவியானாலும் சரி தங்களது கடந்த காலத்தை பகிர்ந்து கொள்ளும் போது அதை பக்குவமாக அதே சமயம் நேர்மையாக தெரிவித்துக் கொள்வது நல்லது.

கணவனும் சரி, மனைவியும் சரி, கடந்த காலத்தை பரந்த மனதுடன் உற்று நோக்கி அவர்களுடைய நேர்மையான மனதை அஸ்திவாரமாக கொண்டு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். ஏனென்றால் கடந்த காலத்தை விட நிகழ்காலம் முக்கியமானது. அதை விட எதிர்காலம் ரொம்ப முக்கியமானது

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: