கணவனை கொல்வதற்கு பாலில் விசம் வைத்த பெண் இறுதியில் 13 பேர் உயிரிழந்த பரிதாபம்.

0
84

கணவனை கொல்வதற்கு பாலில் விசம் வைத்த பெண் இறுதியில் 13 பேர் உயிரிழந்த பரிதாபம்.

பாகிஸ்தானில் புது மணப்பெண் ஒருவர் தனது கணவனுக்கு விஷம் கலந்த பாலினை கொடுத்து கொலை செய்ய முயற்சித்த போது நடந்த விபரீத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லமாபாத்தில் பெண் ஒருவருக்கு அவரது குடும்பத்தினர் கட்டாய திருமணம் செய்துவைத்துள்ளனர்.

தனக்கு மணமகன் பிடிக்கவில்லையென்று கூறியும் அவரது பெற்றோர் அதனை காதில் வாங்கிகொள்ளாமல் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த மணப்பெண் திருமணத்திற்கு அடுத்த நாள் பாலில் கொடிய விஷம் கலந்து மணமகனுக்கு குடிக்க கொடுத்துள்ளார்.

ஆனால், அதனை மணமகன் குடிக்கவில்லை, இதனால் சிறிது நேரம் கழித்து அந்த பாலில் லஸ்ஸி தயாரித்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது, இதனால் 28 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விஷத்தின் தாக்கத்தால் 13 பேர் உயிரிழந்துள்ளனர், 14 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இக்கொடூர குற்றசெயலில் ஈடுபட்ட அப்பெண்ணின் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: