கடைக்கு டீ குடிக்க சென்ற விவசாயி வெட்டி படுகொலை.

0
60

கடைக்கு டீ குடிக்க சென்ற விவசாயி வெட்டி படுகொலை.

திருவண்ணாமலை: கிளியாப்பட்டு கிராமத்தில் காலையில் கடைக்கு டீ குடிக்க சென்ற விவசாயி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கிளியாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சோலை. இவருக்கும் இவரது மைத்துனருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சோலை இன்று காலை அப்பகுதியில் உள்ள கடைக்கு டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு பதுங்கியிருந்த அவரது மைத்துனர் முருகன் சோலையை தனது நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக்கொன்றார்.

இதைத்தொடர்ந்து முருகன் மங்கலம் காவல்நிலையத்தில் சரணடைந்தார். மேலும் கொலையில் ஈடுபட்ட முருகனின் நண்பர்கள் கோதண்டம், தேவராஜ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். சோலையின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நிலத்தகாறில் மைத்துனரே வெட்டிக்கொன்ற சம்பவம் கிளியாப்பட்டு கிராமத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: