கடற்கரையில் பிணமாக கிடந்த இளம்பெண்:சென்னையில் நடந்தது என்ன?

0
66

கடற்கரையில் பிணமாக கிடந்த இளம்பெண்:சென்னையில் நடந்தது என்ன?

சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடற்கரையில் பிணமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீனவக் கிராமம் ஆலமரக்கோட்டை.

இந்த கிராமத்தில் கடற்கரையில் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்தில் கிடைத்த பெண்ணின் கைப்பையை சோதனையிட்ட போது, அதில் அழகு சாதன பொருட்கள், மாத்திரை, அடையாள அட்டை, பணம் உள்ளிட்டவை இருந்துள்ளது.

கிடைத்த அடையாள அட்டையின்படி, அப்பெண் சென்னை என்றும் அவரது பெயர் ஜாகிரா என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் இறந்த பெண் உயிருக்கு போராடியுள்ள தடயங்கள் இருப்பதால், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் இறந்த இடத்தில் ஆண் ஒருவரின் கால் பாதங்கள் இருந்தாலும், அப்பெண்ணின் ஆடைகள் கலையாததால் சம்பவம் குறித்து குழப்ப நிலை வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே இளம்பெண் பிணமாக கிடந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: