திருகோணமலை கந்தளாய் பகுதியில் கஞ்சா செடிகள்….

0
164

திருகோணமலை கந்தளாய் பகுதியில் கஞ்சா செடிகள்….

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கஞ்சா செடிகள் வளர்த்த இளைஞர் ஒருவரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க இன்று (14) உத்தரவிட்டார்.

கந்தளாய் அக்போபுர பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் வீட்டின் பின்புறத்தில் கஞ்சா வளர்த்து வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, மூன்று கஞ்சா செடிகள் பையொன்றில் வளர்க்கப்பட்டதை கண்டுபிடித்துள்ளதாகவும் சந்தேக நபரையும் நேற்று(13) மாலையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: