ஓவியாவைப் பற்றி மனம் திறந்த ஆரவ் என்ன கூறினார் தெரியுமா?

1
165

ஓவியாவைப் பற்றி மனம் திறந்த ஆரவ் என்ன கூறினார் தெரியுமா?

சென்னை: நடிகை ஓவியா இப்போதும் எனக்கு நல்ல ப்ரெண்டாகவே உள்ளார் என்று பிக் பாஸில் வென்ற ஆரவ் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் தாக்குப் பிடித்து டைட்டில் வின்னராக ரூ 50 லட்சத்துடன் வெளியில் வந்துள்ளார் ஆரவ்.
இவர் இதற்கு முன் விஜய் ஆன்டனியின் சைத்தான் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் வந்தார். வேறு எதுவும் சொல்லிக் கொள்கிறமாதிரி இல்லை.

ஆனால் பிக் பாஸில் கிடைத்த புகழ், அவருக்கு பட வாய்ப்புகளைத் தேடித் தந்துள்ளது. அடுத்து ஒரு புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார் ஆரவ்.

தனது புதிய படம் குறித்து அவர் பேசுகையில், “அடுத்த பத்து நாட்களில் புதுப் படத்தை அறிவிக்கிறேன். நடிகை ஓவியா இப்போதும் எனக்கு நல்ல தோழிதான். நல்ல கதை அமைந்தால் அவரும் நானும் இணைந்து நடிப்போம்,” என்றார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: