ஓடி­ம­றைந்­தன 22 ஆண்­டு­கள் தமிழனின் நினைவலைகள் இன்று.

0
48

ஓடி­ம­றைந்­தன 22 ஆண்­டு­கள் தமிழனின் நினைவலைகள் இன்று.

ஈழத்­த­மிழ் மக்­கள் தமது விடு­த­லைப் போராட்ட வர­லாற்­றில் இரண்டு இடப்­பெ­யர்­வு­களை அனு­ப­வித்­தி­ருந்­த­னர். இவை சாதா­ர­ண­மா­னவை அல்ல. அவை பயங்­க­ர­மா­னவை. கொடூ­ர­மா­னவை. காலத்­தால் மறக்க முடி­யா­தவை. தங்­க­ளது உரி­மைப் போர் கார­ண­மாக விடு­த­லைப் புலி­ க­ளின் ஆயு­தப் போராட்­டம் 1983இல் ஆரம்­ப­மா­னது முதல் முள்­ளி­வாய்க்­கா­லில் முடி­வ­டைந்­த­து­வரை தமிழ் மக்­கள் இழந்­த­வை­கள் ஏரா­ளம்.

அம்­மை­யா­ரின் ஆட்­சி­யி­லேயே இடம்­பெற்­றது இடப்­பெ­யர்வு

சமா­தா­னப் புறா­வாக தன்னை இனங்­காட்­டிக் கொண்ட சந்­தி­ரிகா அம்­மை­யா­ரின் ஆட்­சி­யின்­போது இடம்பெற்றதே வைக்­கப்­பட்­டதே யாழ்ப்­பாண மாவட்ட இடப்­பெ­யர்வு. யாழ். மாவட்­டத்தை விடு­த­லைப் புலி­க­ளின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்து கைப்­பற்­றி­விட வேண்­டு­மென்ற நோக்­கில் 1995ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் மாதம் போரை ஆரம்­பித்­தது சந்­தி­ரிகா அரசு. இத­னால் யாழ். குடா­வி­லி­ருந்து சுமார் ஐந்து லட்­சம் தமிழ் மக்­கள் ஓர் இர­வுப் பொழு­துக்­குள் தமது இருப்­பி­டங்­களை விட்டு வெளி­யே­றி­னர்.

யாழ்ப்­பா­ணத்தை 1985ஆம் ஆண்­டி­லி­ருந்து விடு­த­லைப் புலி­கள் தங்­கள் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வந்­தி­ருந்­த­னர். அவ்­வே­ளை­யில் ஐக்­கிய தேசி­யக் கட்சி அரசு யாழ். குடா­நாட்­டைப் புலி­க­ளி­ட­மி­ருந்து விடு­விக்க மேற்­கொண்ட முயற்­சி­கள் பய­ன­ளிக்­க­வில்லை. 1987ஆம் ஆண்டு மே மாதம் அப்­போ­தைய ஐ.தே. கட்சி அர­சில் பாதுகாப்பு அமைச்­ச­ராக இருந்த லலித் அத்­து­லத் முதலி வட­ம­ராட்சி மீது பெரிய இரா­ணுவ நட­வ­டிக்­கை­யொன்றை மேற்­கொண்டு பல பகு­தி­களை அர­சின் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வந்­தி­ருந்­தார்.

இந்­திய அமை­திப் படை­யி­ன­ரின் வரு­கை­யு­டன் வட­ம­ராட்­சிப் பிர­தே­சம் மீண்­டும் புலி­க­ளின் கைக­ளுக்கு மாறி­யி­ருந்­தது. யாழ்ப்­பா­ணத்தை புலி­க­ளி­ட­ம் இருந்து முழு­மை­யா­கக் கைப்­பற்­று­கின்ற திட்­டத்தை ஐக்­கிய தேசி­யக் கட்சி அர­சி­னால் நிறை­வேற்­றிக் கொள்ள முடி­யில்லை. வலி­கா­மம் வடக்­குப் பகு­தி­க­ளில் சில பிர­தே­சங்­கள், தீவ­கம் ஆகி­ய­வற்­றையே ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் ஆட்­சி­யின் போது படை­க­ளால் விடு­த­லைப் புலி­க­ளி­ட­மி­ருந்து மீட்­க முடிந்தது.

1994ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் சந்­தி­ரிகா அம்­மை­யார் முதற் பெண் அரச தலை­வ­ராக மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தார். தனக்கு ஐக்­கிய தேசி­யக் கட்சி அர­சி­னால் ஏற்­பட்­டி­ருந்த கொடு­மை­களை, அவ­லங்­களை மட்­டு­மன்றி தனது கண­வ­ரின் உயி­ரி­ழப்­பி­னூ­டாக தமிழ் மக்­க­ளின் அனு­தா­பத்­தை­யும் சந்­தி­ரிகா பெற்­றி­ருந்­தார். ஒரு­வ­ருட காலம் முடி­வ­டை­வ­தற்குள் தமிழ் மக்­கள்­மீது இப்­ப­டி­யொரு பெரும் போரைத் தொடுத்து பெரிய அள­வி­லான இடப்­பெ­யர்வை ஏற்­ப­டுத்­து­வார் என எந்­த வொரு தமிழ் மக­னும் எதிர்­பார்த்­தி­ருக்­க­மாட்­டான். சந்­தி­ரிகா அம்­மை­யார் விடு­த­லைப் புலி­க­ளு­டன் பேச்சு நடத்தி ஒரு சுமு­க­மான நிலை­யை­க் கொண்டு வர விரும்பி பேச்­சு­க­ளி­லும் ஈடு­பட்­டி­ருந்­தார். சமா­தா­னப் புறா­வாக தம்­மைக் காட்­டிக் கொண்ட அவர், குறு­கிய காலத்­துள் சமா­தான முயற்­சி­க­ளைத் தூக்கி விசி­விட்டு விடு­த­லைப் புலி­க­ளு­டன் மோதலை ஆரம்­பித்து வைத்­தார்.

1995ஆம் ஆண்டு ஜூன் மாதத்­தி­லி­ருந்து யாழ். குடா உட்­பட வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளில் விடு­த­லைப் புலி­கள் அர­சுப் படை­க­ளு­ட­னான தாக்­கு­தல்­க­ளைத் தொடுத்து படை­யி­ன­ருக்கு இழப்­புக்­க­ளை­யும் அளப்­பெ­ரிய சேதங்­க­ளை­யும் ஏற்­ப­டுத்தி வந்­தி­ருந்­த­னர். 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09ஆம் திக­தி­யன்று அர­சுப் படை­கள் வலி.வடக்­கைக் கைப்­பற்­று­வ­தற்­காக இரவு பக­லாக தாக்­கு­தல்­களை நடத்­திக் கொண்­டி­ருக்­கை­யில் பொது­மக்­கள் சொந்த வதி­வி­டங்­க­ளி­லி­ருந்து பாது­காப்­புத் தேடி அகப்­பட்ட பொருள்­க­ளைக் கையில் எடுத்­துக் கொண்டு வெளி­யே­றிக் கொண்­டி­ருந்­த­னர்.

மக்­கள் கூட்­டம் கூட்­ட­மாக வலி.வடக் கி­லி­ருந்து வெளி­யே­றக் கொண்­டி­ருக்­கை­யில் வானூர்­திக் குண்டு வீச்­சுத் தாக்­கு­தல்­கள் அகோ­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்­ட­மை­யில் மக்­கள் கொல்­லப்­பட்­டும் படு­கா­யங்­க­ளுக்கு உள்­ளா­கிக் கொண்­டு­மி­ருந்­த­னர்.

1995ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இண்­டாம் திக­தி­யன்று வட­ம­ராட்சி கடற்­ப­ரப்­பி­லி­ருந்து முப்­ப­டை­யி­ன­ ரின் தாக்­கு­தல்­கள் ஆரம்­ப­மா­கின.

படை­யி­னர் சம­கா­லத்­தில் யாழ். நகர் நோக்கி முன்­னே­று­கின்ற முயற்­சி­யைக் கைவி­டாது தாக்­கு­தல்­களை நடத்­திக் கொண்­டி­ருக்க மக்­க­ளின் இடப்­பெ­யர்­வு­க­ளும் தொடர்ந்­த­வாறு இருந்­தது. படை­யி­ன­ரது தாக்­கு­த­லில் காய­ம­டைந்து யாழ். போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­ப­டு­வோர் தொகை தின­மும் அதி­க­ரித்­துக் கொண்­டி­ருந்­தது. சிகிச்­சைக்­கான மருந்­து­க­ளுக்­குத் தட்­டுப்­பாடு நில­வி­யது. மக்­கள் தின­மும் பேர­வ­லங்­க­ளுக்­குள்­ளா­கிக் கொண்­டி­ருந்­த­னர்.

உண­வுத் தட்­டுப்­பாடு, குடி­தண்­ணீர், சுகா­தார வச­தி­கள் போன்ற அத்­தி­யா­வ­சி­யத் தேவை­கள் நெருக்­க­டி­க­ளுக்கு உள்­ளா­கின. 1995 செப்­ரெம்­பர் 22ஆம் திக­தி­யன்று வட­ம­ராட்சி நாகர் கோ­யி­லுள்ள பாட­சாலை மீது நடத்­தப்­பட்ட வான் தாக்­கு­த­லில் 25 மாண­வர்­கள் வரை­யில் கொல்­லப்­பட்­டி­ருந்­த­னர். வலி.தெற்­குப் பகு­தி­யி­லும் படை­யி­ன­ரின் முன்­னேற்ற நட­வ­டிக்­கை­யா­னது பெரும் இழப்­புக்­கள் மத்­தி­யில் அவர்­க­ளுக்­குச் சாத­க­மா­கின.

வெளி­யே­றும்­படி வந்­தது கட்­டளை

1995 ஒக்­ரோ­பர் மாதம் 23 ஆம் திக­தி­யன்று வலி.வடக்­குப் பகு­தி­களை இரா­ணு­வம் தனது முழு­மை­யான கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வந்­தது. வலி­கா­மத்­தின் நுழை­வா­ச­ லான யாழ். நகரை நோக்கி படை­யி­ன­ரின் முன்­னேற்­றம் பல முனை­க­ளி­லி­ருந்து ஆரம்­ப­மாக மக்­கள் இடம்­பெ­யர ஆரம்­பித்­த­னர். யாழ். நக­ரை­விட்டு உடன் வெளி­யே­று­மாறு புலி­க­ளி­டம் இருந்து மக்­க­ளுக்­குக் கட்­டளை வந்­தது. இதை­ய­டுத்து 1995ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் 30ஆம் திகதி இர­வுக்­குள் 5 லட்­சம் மக்­கள் கூண்­டோடு வெளி­யே­றி­னர்.

தத்­த­மது உட­மை­களை சுமந்­த­வாறு இறு­கிய மனங்­க­ளு­டன் குழந்­தை­கள், சிறு­வர்­கள், பெண்­கள், வயோ­தி­பர்­கள் என செம்­மணி வீதி­யூ­டாக இடப்­பெ­யர்­வுப் பய­ணம் காலை­யி­லி­ருந்து ஆரம்­ப­மா­கின்­றது. துவிச்­சக்­கர வண்­டி­கள் மற்­றும் சிறு­சிறு வண்­டி­கள் உட்­பட மற்­றும் பெரு வாக­னங்­கள் யாவும் செம்­மணி வீதி­யூ­டாக வயற்­ப­ரப்­பி­னை­யும் கண்டி வீதி­யை­யும் ஆக்­கிர ­மி­த்­துக் கொண்­டன.

தண்­ணீர்த் தாகம், பசி உணர்வு, களைப்பு, முதி­ய­வர்­க­ளால் தொடர்ந்து நடக்க முடி­யா­த­நிலை. நோய்­க­ளோ­டு போராட் டம், அழு­து­து­டித்த குழந்­தை­களைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாத நிலை, கர்ப்­பி­ணி­கள்­பட்ட துய­ரம் யாவற்­றுக்­கும் மத்­தி­யில் உச்­சக்­கட்ட அவ­லங்­கள், நெருக்­க­டி­கள் அனைத்­தும் தங்­க­ளுக்கே சொந்­த­மா­கி­விட்ட நிலை­யில் தவித்­த­னர் தமிழ் மக்­கள்.

இடப்­பெ­யர்­வின்­போது ஏற்­பட்ட துய­ரங்­க­ளை­யும் வலி­க­ளை­யும் தாங்­கவே முடி­யாது, அவை சொல்­லி­மா­ளா­தவை. மக்­க­ளற்ற வலி­கா­மம் பிர­தே­சங்­க­ளைப் படை­யி­னர் தம் வசப்­ப­டுத்­திக் கொண்­ட­னர். தென்­ம­ராட்சி மட்­டுமே தங்­கள் கட்­டுப்­பாட்­டில் வைத்­தி­ருக்­கக் கூடிய நிலை­யில் விடு­த­லைப் புலி­கள் இருந்­த­னர்.

ஏதி­லி­க­ளாக ஆகி­னர் யாழ்ப்­பாண மக்­கள்

யாழ்ப்­பா­ணத்­தின் முத­லா­வது இடப்­பெ­யர்­வா­னது தமி­ழர்­க­ளின் பொரு­ளா­தா­ரச் சரி­வுக்­கும் வாழ்­வா­தார வீழ்ச்­சிக்­கும் கார­ண­மா­கி­யது. தமிழ் மக்­க­ளது பொரு­ளா­தார இருப்­பின் அடி அத்­தி­பா­ரத்­தையே அசைத்­தி­ருந்­தது. 5 லட்­சம் மக்­க­ளின் வாழ்­வா­னது தெரு வாழ்க்­கை­யா­னது. ஏதி­லி­க­ளாக தமி­ழர்­கள் வாழ்வு அமைய வேண்­டு­மென்­ப­தில் சந்­தி­ரிகா அம்­மை­யா­ரும் படை­யி­ன­ரும் அப்­ப­டி­யொரு கணக்­கைப் போட்டு வைத்­தி­ருந்­த­னர். சோகங்­க­ளி­லெல்­லாம் பெரும் சோகம் சொந்த ஊரை விட்­டுப் பிரி­கின்ற சோகம்.

அடுத்­தது வாழ்­வா­தா­ரத்தை இழத்­தல். இவ்­வி­ரண்­டை­யும் யாழ்ப்­பாண மக்­கள் மீது அப்­போ­தைய சந்­தி­ரிகா அம்­மை­யா­ரின் ஆட்சி திட்­ட­மிட்டு வலிந்து திணித்­தி­ருந்­தது. மக்­க­ளின் இடப்­பெ­யர்­வு­க­ளுக்கு மத்­தி­யில் ஆகா­யப் பரப்­பில் வேவு வானூர்­தி­கள் உட்­பட புக்­காரா, சுப்­பர் சொனிக் வானூர்­தி­கள் தொடர்ச்­சி­யான குண்­டு ­வீச்­சுக்­களை நடத்­திக் கொண்­டி­ருந்­தன. இத­னால் ஆயி­ரக்­க­ணக்­கான மக்­கள் செத்­து­ம­டிந்­த­னர்.

அடைக்­க­லம் தந்­தது வன்னி

தென்­ம­ராட்­சி­யை­யும் வன்­னி­யை­யும் நோக்கி இடம்­பெ­யர்ந்த மக்­கள் செய்­வ­த­றி­யாது தவித்­துக் கொண்­டி­ருந்­த­போது செல்­லும் இடங்­க­ளில் கண்­ணுற்ற இடங்­க­ளான தேவா­ல­யங்­கள், சன­ச­மூக நிலை­யங்­கள் இந்­து­மத ஆல­யங்­கள், வெறு­மை­யா­கக் காணப்­பட்ட கட்­ட­டங்­கள் மக்­க­ளுக்கு தஞ்­ச­ம­ளித்­தன. மீண்­டும் சொந்த இடங்­க­ளுக்கு திரும்­பிச் செல்­வோமா அல்­லது இதுவே தஞ்­சம்­தானா? எங்கே மீண்­டும் மீண்­டும் செல்­வது? உற­வு­களை எங்கே காண்­பது? என்ற ஏக்­கங்­கள் அவர்­க­ளின் மன­தில் ஆழப்­ப­திந்­தி­ருந் தன.

இடப்­பெ­யர்­வு­க­ளோடு இளை­ஞர்­கள், யுவ­தி­கள் ஆயி­ரக்­க­ணக்­கில் புலி­கள் இட­யக்­கத்­தில் இணைந்து கொண்­ட­னர். இத­னால் புலி­க­ளின் பலம் பல­ம­டங்­கா­கி­யது. அர­சி­யல் நகர்­வு­க­ளும் வெற்­றி­ய­ளித்­தன. யாழ்ப்­பா­ணத்­தைக் கைப்­பற்­றிய சந்­தி­ரிக்கா அரசு கொழும்­பில் பெரும் கொண்­டா­டங்­களை முன்­னெ­டுத்த போதி­லும் அவை நீண்டு நிலை­பெ­ற­வில்லை. யாழ்ப்­பா­ணத்தை மீட்­டெ­டுத்த அர­சின் வெற்­றிக்கு வன்­னி­யில் அர­சுக்­குப் பல தோல்­வி­கள் பதி­லாக வழங்­கப்­பட்­டன.

ஓடி­ம­றைந்­தன 22 ஆண்­டு­கள்

ஈழத்­த­மிழ் மக்­க­ளின் பல இடப் பெ­யர்­வு­க­ளில் மிக முக்­கி­ய­மா­னது யாழ்ப்­பா­ணத்­தில் 1995ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் மாதம் 30ஆம் திகதி திங்­கட்­கி­ழமை நடந்­தே­றிய இடப் பெ­யர்வே. இந்­தத் துய­ரம் நடந்­தேறி இன்­று­டன் 22 ஆண்­டு­கள் கடக்­கின்­றன. முன்­னைய நாள் அர­ச தலை­வர் சந்­தி­ரிகா சமா­தான தேவதை என்ற மதிப்­பை­யும் அடை­யா­ளத்­தை­யும் இழந்­த­வ­ரா­கவே இன்­றும் யாழ்ப்­பாண மக்­க­ளைச் சந்­தித்து விட்­டுச் செல்­கின்­றார். ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன, ஆர்.பிரே­ம­தாச, மகிந்த ராஜ­பக்ச வரி­சை­யில் சந்­தி­ரிகா குமா­ர­துங்­க­வும் தமி­ழர்­க­ளின் படு­கொ­லை­க­ளுக்­கும் நிம்­ம­தி­யற்ற வாழ்­வுக்­கும் இடப்­பெ­யர்­வு­க­ளுக்­கும் பொரு­ளா­தார இழப்­பு­க­ளுக்­கும் என்­றுமே முக்­கிய பொறுப்­பாளி என்­பதை எவ­ரும் மறுத்­திட இய­லாது மறக்­க­வும் இய­லாது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: