ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளன..

0
74

ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளன.

மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா மாதாபுரா கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மனைவி ரூபா(வயது 31). இந்த தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அவர்களுக்கு 10 ஆண்டுகளாக குழந்தை பிறக்காமல் இருந்தது. இதற்காக மஞ்சுநாத்தும், ரூபாவும் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தனர். இதன் விளைவாக ரூபா கர்ப்பம் அடைந்தார்.

இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ரூபாவுக்கு நேற்று முன்தினம் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து மஞ்சுநாத், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ரூபாவை மீட்டு நஞ்சன்கூடு டவுனில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்தார்.

3 குழந்தைகள் பிறந்தன

அங்கு ரூபாவுக்கு ஒரே பிரசவத்தில் ஒரு ஆண் குழந்தை, 2 பெண் குழந்தைகள் என 3 குழந்தைகள் பிறந்தன. அந்த 3 குழந்தைகளும், அதன் தாயும் தற்போது நலமாக உள்ளனர்.

திருமணம் முடிந்து 10 வருடங்கள் கழித்து ஒரே பிரசவத்தில் ரூபா 3 குழந்தைகளை பெற்றெடுத்ததால் உறவினர்கள், அப்பகுதி மக்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் ரூபாவுக்கு பிரசவம் பார்த்த டாக்டர்களுக்கு மஞ்சுநாத் நன்றி தெரிவித்து கொண்டார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: