ஒரு நாள் இரவை மட்டும் கழிப்பதற்காக இரகசியமாக வெளிநாடு சென்றுவரும் அமைச்சர்!!

0
49

ஒரு நாள் இரவை மட்டும் கழிப்பதற்காக இரகசியமாக வெளிநாடு சென்றுவரும் அமைச்சர்!!

மாதம் ஒரு தடவை இரகசியமாக வெளிநாடு சென்று ஓர் இரவை மட்டும் கழித்து விட்டு நாடு திரும்பும் அமைச்சர் ஒருவர் தொடர்பில் வார இறுதி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சரவை அந்தஸ்துடைய இந்த அமைச்சர் மாதம் ஒரு தடவை ஓர் இரவை மட்டும் வெளிநாட்டில் கழித்து வருகின்றார்.

இந்த இரகசிய பயணம் குறித்து இராஜதந்திர மட்டத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தனது இராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்தி குறித்த அமைச்சரவை அமைச்சர் ஒவ்வொரு மாதமும் சென்னைக்குச் சென்று இரவை கழித்து மீளவும் மறுநாள் பகல் நாடு திரும்பியுள்ளார்.

இந்த பயணங்கள் தொடர்பில் இராஜதந்திர ரீதியில் எவ்வித அறிவிப்புக்களையும் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

பொதுவாக அமைச்சர் ஒருவர் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் போது அறிவிக்க வேண்டியது அவசியமானது என்ற போதிலும் அவர் இவ்வாறு அறிவித்துவிட்டு செல்வதில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தனிப்பட்ட விஜயம் என்றாலும் குறித்த நாட்டுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டியது அவசியமானது எனவும், அவ்வாறு அறிவித்தாலே அவரது பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தப்பட முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த பயணங்கள் தொடர்பில் இந்திய பாதுகாப்புத் தரப்பினர் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர் என அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: