ஒரு இளம் பெண்ணுடன் தனிமையில் இருந்த மூன்று இளைஞர்கள்!! மடக்கிப்பிடித்தனர் பொது மக்கள்.

1
688

மட்டக்களப்பு – மாவடிவேம்பு பிரதேசத்தில் மூன்று இளைஞர்கள் பெண்ணொருவரின் வீட்டில் தாகத முறையில் இருந்த சந்தர்ப்பத்தில் அப்பகுதி மக்கள் அவர்களை மடக்கிப் பிடித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு சுமார் 09.00 மணியளவில் நடந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மாவடிவேம்பு பிரதேசத்தில், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், கிராம மக்கள் எனப் பலரும் ஒன்று திரண்டு ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்களில் ஒருவரை மடக்கிப்பிடித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் அடிக்கடி சிலர் வருவதை அவதானித்த கிராம மக்கள், திட்டமிட்டு அவர்களை சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது மூவரில் ஒருவரை மடக்கிப்பிடித்த மக்கள் ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: