ஏஞ்சலினா ஜோலியாக ஆசைப்பட்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பெண்! பேய் போல் மாறிய முகம்!

0
148

ஏஞ்சலினா ஜோலியாக ஆசைப்பட்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பெண்! பேய் போல் மாறிய முகம்!

ஏஞ்சலினா ஜோலியாக ஆசைப்பட்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பெண்..வீடியோ பாக்தாத்: ஈராக்கை சேர்ந்த பெண் ஒருவர் ஏஞ்சலினா ஜோலியாக ஆசைபட்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். சஹர் தாபர் என்ற அந்த பெண் இந்த பிளாஸ்டிக் சர்ஜரி காரணமாக பார்ப்பதற்கே மிகவும் கொடூரமாக மாறியிருக்கிறார். தற்போது இவரது புகைப்படங்கள் இணையம் முழுக்க வைரல் ஆகி இருக்கிறது. மேலும் இவர் ஏஞ்சலினா ஜோலி போல மாறுவதற்காக இன்னும் நிறைய வித்தியாசமான முயற்சிகளையும் செய்து இருக்கிறார்.

ஏஞ்சலினா ஜோலி
ஏஞ்சலினா ஜோலி

இவருக்கு இன்னும் சில நாளில் திருமணம் வேறு நடக்க இருக்கிறது. அவரது பிளாஸ்டிக் சர்ஜரி புகைப்படங்கள் காரணமாக அவர் ஒரே நாளில் வைரல் ஆகியுள்ளார். ஏஞ்சலினாவின் ரசிகை ஈராக்கின் பாக்தாத்தில் வசித்து வருகிறார் சஹர் தாபர். நடிகை ஏஞ்சலினா ஜோலியின் தீவிர ரசிகையான இவர் அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று பல முறை பேட்டி அளித்து இருக்கிறார். ஏஞ்சலினா போல காட்சி அளிப்பதற்காக இவர் செய்யும் மேக்கப்கள் மிகவும் பிரபலம். மேலும் இதன் காரணமாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் மிகவும் வைரல் ஆகியிருக்கிறது.

ஏஞ்சலினா ஜோலி 2ஏஞ்சலினா ஜோலி
ஏஞ்சலினா ஜோலி 2

ஏஞ்சலினா ஜோலி மீதான காதல் அதிகரிக்கவே அந்த பெண் விபரீதமான முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறார். அதன்படி ஏஞ்சலினா போலவே இருப்பதற்காக முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறார். இதற்காக மொத்தமாக 50 பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். இதற்கு மிகவும் செலவு செய்துள்ளார். மேலும் அவரை போல உடலையும் டயட் இருந்து குறைத்துள்ளார்.

அவர் தனது முகத்தில் செய்த 50 பிளாஸ்டிக் சர்ஜரிகள் காரணமாக அவரது முகம் மிகவும் மோசமாக மாறியிருக்கிறது. ஆங்கில பேய் படங்களில் வரும் பேய் போல மாறியிருக்கிறார். வெறும் 19 வயதே ஆனா அந்த பெண் தற்போது 40 வயது தாண்டிய பெண் போல வேறு இருக்கிறார். மேலும் அவருக்கும் ரோஷன் என்பவருக்கும் தற்போது திருமணம் நிச்சயம் ஆகி இருக்கிறது. சில நாட்களில் திருமணம் நடக்கவுள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: