எமி ஜாக்சன் சீரியல் நடிகை ஆகிறார்.!! எமி ஜாக்சன் சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

0
131

எமி ஜாக்சன் சீரியல் நடிகை ஆகிறார்.!! எமி ஜாக்சன் சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இங்கிலாந்து மாடல் அழகியான எமி ஜாக்சன் தமிழில் ‘மதராசப்பட்டினம்’ மூலம் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து தமிழில் ‘ஐ’, ‘தங்கமகன்’, தெறி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சங்கர் இயக்கத்தில் ரஜினியுடன் இணைந்து ‘2.O’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் கேர்ள்’ என்ற டிவி தொடரில் நடிக்க உள்ளார். இதன் மூன்றாவது சீசனில் அவர் சாட்டர்ன் கேர்ள் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தத் தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனேவே இந்தியாவைச் சேர்ந்த பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா குவாண்டிகா என்ற ஆங்கிலத் தொடர் மூலம் கவனம் பெற்று `பே வாட்ச்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த வரிசையில் தற்போது எமி ஜாக்சனும் இணைந்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: