எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் இன்ஜினியர் கால்கள் துண்டானது: ஆபத்தான நிலையில் சிகிச்சை.

0
70

எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் இன்ஜினியர் கால்கள் துண்டானது: ஆபத்தான நிலையில் சிகிச்சை.

சென்னை: தண்டவாளத்தை கடக்க முயன்றபோது எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கிய ரயில்வே இன்ஜினியரின் இரண்டு கால்கள் துண்டான சம்பவம் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் பிக்காஸ் சந்திரசேகர் (39). மெக்கானிக் இன்ஜினியரான இவர், கடந்த 20.12.2016ம் ஆண்டு ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்தார். ஜோலார்பேட்டையில் உள்ள யார்டில் பணியாற்றி வந்த சந்திரசேகர், சில மாதங்களுக்கு முன் பேசின் பிரிட்ஜ் யார்டுக்கு பணிமாறுதலில் வந்துள்ளார். இந்நிலையில், ேநற்று முன்தினம் இரவு பணிக்கு வந்த சந்திரசேகர், பணி முடித்துவிட்டு நேற்று காலை வீட்டிற்கு செ

ல்வதற்காக பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு தண்டவாளம் வழியாக செல்ல முயன்றார். வழக்கமாக, பயணிகள் யாராவது ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு தண்டவாளம் வழியாக சென்றால் அவர்கள் மீது ரயில்வே போலீசார் நடவடிக்கை எடுத்து அபராதமும் விதிப்பது வழக்கம்.
ஆனால், அவசரத்தில் சந்திரசேகர் நடைமேகளுக்கு இடையே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அப்போது சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு ேநாக்கி இரண்டு அடுக்கு கொண்ட எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது.
இதை பார்த்த சந்திரசேகர் எக்ஸ்பிரஸ் ரயில் வருவதற்குள் தண்டவாளத்தை கடந்து விடலாம் என்று நினைத்து நடைமேடையே நோக்கி தண்டவாளத்திற்கு இடையே ஓடினார். அப்போது எக்ஸ்பிரஸ் ரயில் அருகில் வந்தது. அதிர்ச்சியடைந்த சந்திரசேகர் நிலை தடுமாறி தண்டவாளத்தில் விழுந்தார். இதை பார்த்த ரயில் பயணிகள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். ரயில் சென்று கொண்டு இருந்ததால் பயணிகள் அவரை காப்பாற்ற முடியாமல் தவித்தனர். ரயில் சென்ற பிறகு பயணிகள் சந்திரசேகர் அருகே சென்று பார்த்த போது அவரது இரண்டு கால்களும் தண்டவாளத்திற்கு வெளியேயும், உடல் தண்டவாளத்திலும் துண்டாகி கிடந்தன.

ரத்த வெள்ளத்தில் அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இதுகுறித்து சென்ட்ரலில் உள்ள ரயில்வே போலீசாருக்கு பணிகள் தகவல் கொடுத்தனர். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுபற்றி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிகிச்சை பெற்று வரும் சந்திரசேகரின் துண்டான இரண்டு கால்களையும் இணைப்பது குறித்து மருத்துவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளதாலும், அதிக ரத்தம் வெளியேறியதாலும் தற்போது சுயநினைவு இன்றி உள்ளார். சுயநினைவு திரும்பிய பிறகுதான் அவரது இரண்டு கால்களையும் இணைக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: