உலகத்தை திரும்பி பார்க்க வைத்த ஜப்பானிய இளவரசி மேக்கோவின் காதல்!

0
103

உலகத்தை திரும்பி பார்க்க வைத்த ஜப்பானிய இளவரசி மேக்கோவின் காதல்!

ஜப்பானிய இளவரசி மேக்கோ, அரச குடும்ப அந்தஸ்தை துறந்து சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த தனது காதலரை திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இளவரசி மேக்கோ (25) ஜப்பானிய பேரரசர் அகிஹிட்டோவின் மூத்த பேத்தியாவார்.

பேரரசர் அகிஹிட்டோவின் இரண்டாவது புதல்வரான இளவரசர் அகிஷினோ இளவரசி கிகோ தம்பதியரின் மகளான மேக்கோவை, ஜப்பானிய அரச பரம்பரை வழக்கப்படி ஜப்பானிய மக்கள் இளவரசி அகிஷினோ என அழைத்து வருகின்றனர்.
இளவரசி மேக்கோ டோக்கியோவில் உள்ள சர்வதேச கிறிஸ்தவ பல்கலைக்கழகத்தில் தன்னுடன் கல்வி கற்ற கீ கொமுரோ என்ற இளைஞரைக் காதலித்தார்.

ஜப்பானிய இளவரசி மேக்கோ
ஜப்பானிய இளவரசி மேக்கோ

கீ கொமுரோ அரச பரம்பரை பின்னணி எதுவுமில்லாத சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். தற்போது, இவர் சட்ட அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இளவரசி மேக்கோ, கீ கொமுரோ காதலுக்கு அரச குடும்பம் பச்சைக் கொடி காட்டியதையடுத்து அவர்கள் இருவரும் அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தனர்.

ஜப்பானிய இளவரசி மேக்கோ
ஜப்பானிய இளவரசி மேக்கோ

எனினும், இளவரசியான மேக்கோ சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொள்வதால் சட்டப்படி அவர் அரச குடும்ப அந்தஸ்தை இழக்க நேரிடும்.
ஜப்பானின் சர்ச்சைக்குரிய சட்டமொன்றின்படி, அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் சாதாரண குடிமகன்களை திருமணம் செய்தால்இ அவர்கள் தமது அரச குடும்ப அந்தஸ்தை இழக்க நேரிடும்.
எனினும் சாதாரண பெண்களை அரச குடும்பத்து ஆண்கள் திருமணம் செய்தால் அந்த ஆண்கள் அரச குடும்ப அந்தஸ்தை இழக்க மாட்டார்கள்.

இளவரசி மேக்கோ இத் திருமண அறிவிப்பு குறித்து கூறுகையில், ‘இது உண்மையிலேயே மகிழ்ச்சி தரும் தருணமாகும். திருமணம் செய்து கொண்டால் அரச அந்தஸ்து போய்விடும் என்பது எனக்கு சிறுவயதிலேயே தெரியும்.

இருப்பினும், அரச குடும்பத்தில் என்னுடைய கடமைகளை முழுமையாக நிறைவேற்றியுள்ளேன். தற்போது எனது சொந்த வாழ்க்கையை விரும்பி ஏற்கவுள்ளேன்.
கொமூரோவின் புன்னகை பிரகாசமான சூரிய ஒளி போல இருந்தமையே அவரை தான் காதலித்தமைக்கு காரணம் எனவும் இளவரசி மேக்கோ கூறினார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: