உன் சகோதரியை படம் எடுத்து யூடியூபில் போடு! தீக்குளித்த டாக்சி டிரைவர்!

0
95

தமிழகத்தில் போக்குவரத்து பொலிசார் ஆபாசமாக திட்டியதால் மனமுடைந்த டாக்சி டிரைவர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் சென்னை தரமணியில் கால்டாக்சி டிரைவராக பணிபுரிந்து வரும் மணிகண்டன்( 21) என்பவர் தரமணியில் வாடிக்கையாளரை இறக்கிவிட சென்றுள்ளார்.

இறக்கிவிட்டு திரும்பிய மணிகண்டனை மடக்கிய விஜயகுமார் மற்றும் தாமரைச்செல்வன் என்னும் இரண்டு போக்குவரத்து பொலிசார், மணியிடம் அசல் ஓட்டுநர் உரிமம், கார் உரிமம் உள்ளிட்டவற்றை கேட்டுள்ளனர்.

அனைத்து அசலையும் மணிகண்டன் சமர்பித்த நிலையில், அவரிடம் சீட் பெல்ட் போடவில்லை என கூறி பொலிசார் லஞ்சம் கேட்டுள்ளனர், என்னிடம் அனைத்து உரிமமும் உள்ளது நான் ஏன் தர வேண்டும் என மணிகண்டன் எதிர் கேள்வி கேட்டுள்ளார்.

ஆத்திரம் அடைந்த பொலிசார் கம்பியால் தாக்கி, மிகவும் தர்க்குறைவான வார்த்தைகளால் மணிகண்டனை பொதுமக்கள் மத்தியில் திட்டியுள்ளானர், ஒரு கட்டத்தில் பொலிசார் திட்டியதை படமெடுத்த மணிகண்டனை பார்த்து “உன் சகோதரிகளை போய் படம் எடுத்து யூடியூபில் போடு” என ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மணிகண்டன், காரில் அமர்ந்து நடந்தவற்றை வாக்குமூலமாக பதிவு செய்துவிட்டு, வண்டியில் இருந்த பொட்ரோலை எடுத்து மேலே ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.

உடனடியாக பொலிசார் ஓட்டம்பிடித்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் மணிகண்டனை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை முழுவதும் இந்த செயல் பதற்றத்தை உண்டாக்கிய நிலையில் பொலிஸ் ஆணையர் விஸ்வநாதன், மணிகண்டன் அனுமதிக்கப்பட்டுள்ள கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆணையர் விஸ்வநாதன் கூறுகையில், மிகவும் வருத்தம் அளிக்கும் இந்த நிகழ்வில் தொடர்புடைய பொலிசார் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

மேலும் மணிகண்டன் உடலில் 65 சதவிகிதம் தீக்காயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

உன் சகோதரியை படம்
உன் சகோதரியை படம்
தீக்குளித்த டாக்சி டிரைவர்!
தீக்குளித்த டாக்சி டிரைவர்!
உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: