இளம் பொலிஸ் கான்ஸ்டபிளின் தன்னை தானே சுட்டு தற்கொலை. காரணம் யார்?

0
130

பண்டாரவெல, பொரலந்த பொலிஸ் கல்லூரியில் கடமையில் ஈடுபட்ட இளம் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார்.

பொலிஸ் கான்ஸ்டபிள்
பொலிஸ் கான்ஸ்டபிள்

நேற்று காலை 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அம்பாறை வீரகொட பிரதேசத்தை சேர்ந்த லக்மால் பிரியந்த என்பவரே தற்கொலை செய்து கொண்டவராகும். அவர் ஒரு சிறந்த பாடகர் என தெரிவிக்கப்படுகின்றது.

காதல் தொடர்பு காரணமாக ஏற்பட்ட மனவேதனையினால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்கொலை செய்து கொள்வதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வருத்தமான சில பதிவுகளை வெளியிட்டுள்ளார். தான் இந்த உலகை விட்டு பிரிந்து செல்வதனை வெளிப்படுத்தும் வகையிலும் சில பதிவுகளையும் வெளியிட்டுள்ளார்.

தனது காதலி இந்த உலகின் சிறந்த காதலி என குறிப்பிடும் வகையில் பதிவுகளையும் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இறுதியாக தனது தாயாருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டவர், “நான் உங்களை அதிகமாக நேசிக்கின்றேன் அம்மா..” என பதிவிட்ட பின்னர் அவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: