இளம் தாயும் அவருடைய 11 வயது மகனும் வெட்டி கொலை!! நகைகள் திருட்டு!!

0
129

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர்பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னக்குடா பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் தாயும் மகனும் கழுத்துவெட்டப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

கூரை வழியாக வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர்கள் தாயையும் மகனையும் வெட்டிக் கொலை செய்ததுடன் வீட்டிலிருந்த நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், நேற்று இரவு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டள்ளனர்.

சம்பவத்தில் 26 வயதுடைய பீதாம்பரம் மதுசாந்தி என்ற பெண்ணும் அவருடைய மகனான 11 வயதுடைய மதுசான் என்ற சிறுவனும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண்ணின் கணவர் சுமார் ஏழு வருடங்களுக்கு மேலாக மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பணிபுரிவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி கொலை தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: