இளம் அகதிப்பெண்களை விபச்சாரத்தில் தள்ளும் கொடுமை. ஜெர்மனியில் அம்பலம்.

0
86

இளம் அகதிப்பெண்களை விபச்சாரத்தில் தள்ளும் கொடுமை. ஜெர்மனியில் அம்பலம்.

ஜெர்மனியிலுள்ள பெர்லின் நகரில் இளம் வயதுடைய அகதிகளை, அவர்களைப் பாதுகாக்க அமர்த்தப்பட்ட பாதுகாப்பு ஊழியர்களே பணத்திற்காக விபசாரத்தில் ஈடுபடுத்துவது அம்பலமாகி உள்ளது.. அந்நாட்டின் தனியார் தொலைக்காட்சி ஒன்று இதனை அம்பலத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

இளம் வயது பெண் அகதிகள், சிறுவர், சிறுமிகள் தான் விபசாரத்தில் தள்ளப்படுகிறார்கள். அகதிகள் மையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்கள், பணம் கொடுப்பதாக கூறி இவர்களை விபசாரத்தில் தள்ளிவிடுகிறார்கள்.

16 வயதிலிருந்து அதற்கு அதிகமான வயதுடைய அகதிகள் தான் இவர்களின் குறியாக உள்ளது. இளம் வயது அகதிகள் அதிக விலைக்கு போகிறார்கள்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாதுகாப்பு ஊழியர் ஒருவர் கூறுகையில், ஓர் அகதியின் மூலம் விபசாரத்திற்கான கமிஷனாக தனக்கு 20 ஈரோ டாலர் கிடைப்பதாக தெரிவித்துள்ளார்.

இது அவமானமாக இருந்தாலும், பணம் சம்பாதிக்க வேறு வழி தெரியவில்லை என கூறியுள்ளார்.

பெர்லின் ஒருங்கிணைப்பு தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் துறை சார்பில் பேசிய நபர், இது குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். இது சம்பந்தமான ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

ஐரோப்பாவுக்கு செல்லும் இளம் அகதிகளில் 75 விழுக்காடு பேர் பாலியல் துஷ்பிரயோகம், சிறார் திருமணம் போன்றவற்றால் பாதிக்கப் படுகிறார்கள் என ஐக்கிய நாடுகள் சபை கடந்த மாதம் கூறியது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: